சாத்தூராருக்கு எதிராக அறிவாலயத்தில் உண்ணாவிரதம் ... திமுக தொண்டருக்கு அனுமதி மறுப்பு
சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் வாங்கித் தருவதற்காக முன்னாள் அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனிடம் பணம் கொடுத்து ஏமாந்த திமுக தொண்டர் அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுத்துள்ளதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்துள்ளது.
ஸ்ரீவில்லிப்புத்தூரைச் சேர்ந்த ஜே.எம். கோஸ் என்பவர் சாத்தூர் ராமச்சந்திரன் திமுகவில் போட்டியிட சீட் வாங்கிக் கொடுக்க ரூ35 லட்சம் கொடுத்திருக்கிறார். ஆனால் சீட்டும் கிடைக்கவில்லை. சாத்தூர் ராமச்சந்திரனிடம் கொடுத்த பணமும் திரும்ப வரவில்லை.
இதனால் தமக்கு நீதி கிடைக்க திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை மாநகர போலீசிடம் மனு கொடுத்தார் கோஸ். ஆனால் சென்னை மாநகரக் காவல்துறை எந்த பதிலையும் தரவில்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார் அவர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி பால் வசந்தகுமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகரக் காவல்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த 29-ந் தேதியன்று கோஸ் உண்ணாவிரதம் இருக்க அனுமதி மறுக்கப்பட்டுவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கோஸின் மனுவை நீதிபதியும் நிராகரித்தார்.
-
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ! -
திமுக நாசமா போக காரணமே நாமதான்..ஒரிஜினல் திமுககாரன வளர்த்து விடுங்க! மேடையில் வெடித்த மாஜி மூர்த்தி! -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்!












Click it and Unblock the Notifications