எங்கே துரைதயாநிதி?: அழகிரி மகள் கயல்விழி கணவர் வெங்கடேஷிடம் மதுரை போலீஸ் விசாரணை

பல்லாயிரம் கோடி கிரானைட் கொள்ளையில் தொடர்புடைய துரை தயாநிதி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். இவர்களைப் பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். தற்போது துரை தயாநிதியை எப்படியும் தூக்கிவிடுவது என்ற முடிவில் மதுரை போலீசார் இருக்கின்றனர். முதல் கட்டமாக துரைதயாநிதியின் பள்ளித் தோழரை திருவாரூரில் இருந்து தூக்கியது மதுரை போலீஸ். இதேபோல் அவரது இதர சகபாடிகளிடம் போலீசார் விசாரணை நடத்தியிருக்கின்றனர்.
இப்பொழுது அழகிரியின் மகளான "கவிதாயினி" கயல்விழியின் கணவர் வெங்கடேஷை இழுத்துப் போயிருக்கிறது. இதற்காக மதுரை போலீசில் ஆஜராக வெங்கடேஷுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று காலையில் மதுரை போலீசில் வெங்கடேஷ் ஆஜரானார்.. அவரிடம் மதுரை போலீசார் கிடுக்குப் பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அழகிரியின் "சுற்றமும் நட்பு"மான அத்தனை உறவினர்களையும் மதுரைக்கு வரவழைத்து விசாரணை நடத்த இருக்கிறது மதுரை போலீஸ்!












Click it and Unblock the Notifications