ரங்கசாமி மீது கோபம்... புதுவை அமைச்சர் திடீர் ராஜினாமா

Subscribe to Oneindia Tamil

புதுச்சேரி: புதுவை முதல்வர் ரங்கசாமி, தனது ஏனாம் தொகுதியின் அடிப்படை வசதிகள் குறித்து அக்கறை காட்டாமல் இருப்பதாக கூறி தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

புதுவை மாநிலம் ஏனாம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. மல்லாடி கிருஷ்ணாராவ். இவர் பல திட்டங்கள் தனது தொகுதியில் நடைபெறவில்லை என அதிருப்பதியில் இருந்து வந்தார். ஏனாம் அரசு மருத்துவனையில் நிர்வாக சீர்கேடுகளை களைய வேண்டும். கோதாவரி ஆற்றங்கரையில் வெள்ள தடுப்பு சுவர் கட்ட வேண்டும். ஏனாமில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஏனாம்-ஆந்திர மீனவர்கள் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும். மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உதவி வழங்க வேண்டும், ரீஜென்சி டைல்ஸ் தொழிற்சாலையை திறக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் ஆகியவை உள்பட பல முக்கிய கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என புதுவை சட்டசபையில் வலியுறுத்தி வந்தார்.

மேலும், அக்டோபர் 2-ந் தேதிக்குள் தனது தொகுதியில் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை யென்றால் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்வேன் என்றும் அறிவித்தார்.

இதையடுத்து முதல்வர் ரங்கசாமி, மல்லாடியை அழைத்துப் பேசினார். சமாதானம் செய்தார். இந்த நிலையில் நேற்று டெல்லியில் நடந்த விழாவில் மல்லாடி கலந்து கொண்டார். அதில் ஏனாம் முதியோர் பராமரிப்பு மையத்திற்கு வழங்கப்பட்ட விருதினை பெற்றுக்கொண்டார். விழா முடிந்தவுடன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை செய்தார். பின்னர் ஒருமனதாக முடிவு செய்து தனது ராஜினாமதா கடிதத்தை சபாநாயகர் சபாபதிக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தார்.

ஆனால் நேரில் வந்து ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தால்தான் ஏற்பேன் என்று சபாநாயகர் சபாபதி அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+