கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!
கரூர் : கூடங்குளம் அணு மின் நிலையத்தை உடனடியாக செயல்படுத்த கோரி காங்கிரஸ் கட்சியினர் தமிழகம் முழுவதும் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். கரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஞானதேசிகன் எம்.பி. வெளியிட்ட அறிக்கையில், கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உற்பத்தி துவக்கப்படும் நிலையில் சிலர் வேண்டும் என்றே தடைகளை ஏற்படுத்தி வருகின்றனர். தமிழகத்தில் சுமார் 3 ஆயிரம் மெகா வாட் அதிகமாக மின் பற்றாக்குறை உள்ளது. இதனால் பொதுமக்களும், தொழிற்சாலைகளும், அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆனால் சிலர் வேண்டும் என்றே வேறு நோக்கத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அப்பாவி மக்களை திசை திருப்பி வருகின்றனர். எனவே கூடங்குளத்தின் அவசியம் மற்றும் அவசரம் குறித்து உணர்த்தும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி இன்று காலை தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கரூரில் தாலுக்கா அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட தலைவர் பேங்க்.சுப்பிரமணி தலைமையிலும், கரூர் நகரத் தலைவர் சுப்பன், குளித்தலை நகர தலைவர் சர்புதீன், தாந்தோனி நகரத் தலைவர் ராமலிங்கம், இனாம் கரூர் நகரத் தலைவர் அங்கமுத்து ஆகியோர் முன்னிலையிலும், கூடங்குளம் அணுமின் நிலையத்தை செயல்படுத்த கோரி ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து பலரும் கூடங்குளம் அணு உலையை திறக்க வேண்டும் என்றும், போராட்ட குழு ஒருங்கிணைப்பாளர் சுப.உதயகுமாரை கைது செய்ய கோரியும் வலியுறுத்தினர்.
-
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications