திருப்பூருக்கு வருகிறார் 'போலீஸ் கமிஷனர்'... கமிஷனரகம் அமைக்க ஜெ. உத்தரவு!

தமிழகத்தில் மொத்தம் 9 பெருநகரங்கள் உள்ளன. அதாவது இந்த 9 நகரங்களும் மாநகராட்சிகள் ஆகும். தலைநகர் சென்னை தவிர, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூ்ர் ஆகியவையே இவை.
இந்த ஒன்பது நகரங்களில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய ஆறு நகரங்களில் மட்டும் காவல்துறை ஆணையர்கள் உள்ளனர். தற்போது 7வது ஆணையகரம் திருப்பூரில் அமையவுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் ஜெயலலிதா பிறப்பிக்கவுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பூரில் புதிய காவல்துறை ஆணையரகத்தை தோற்றுவிக்க, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். திருப்பூரில் புதியதாக அமைக்கப்பட உள்ள காவல்துறை ஆணையரகம் ரூ.17 கோடியே 49 லட்சம் செலவில் அமைக்கப்பட உள்ளது.
மேலும் திருப்பூரில் 1,008 காவல்துறை பணியிடத்தை அனுமதித்தும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இதுதவிர மணப்பாறை, மதுரை அவனியாபுரம், திருப்பத்தூர், குரோம்பேட்டை, தாராபுரம் உள்ளிட்ட இடங்களில் புதிய போக்குவரத்து காவல்நிலையங்கள் அமைக்கவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
சென்னை தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 12 புறக்காவல்நிலையங்களும், முழுஅளவிலான காவல்நிலையங்களாக தரம் உயர்த்தப்பட உள்ளன. தரம் உயர்த்தப்படும் இந்த 12 காவல்நிலையங்களிலும், புதியதாக 355 பணியிடங்களை தோற்றுவிக்கவும் ஜெயலலிதா உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications