காவிரி: கர்நாடகத்தின் மனு மீது வரும் 8ம் தேதி விசாரணை

தமிழகத்துக்கு திறந்துவிடப்பட வேண்டிய காவிரிநீரை கர்நாடகம் இந்த ஆண்டு திறந்துவிடவில்லை. இதனால் குறுவை சாகுபடி பொய்த்தது. சம்பா சாகுபடிக்கு தண்ணீரை திறந்துவிடக் கோரி தமிழகம் போராடியது. இதன் விளைவாக பிரதமர் தலைமையில் காவிர் நதிநீர் ஆணையக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகம் கோரிய அளவைவிடக் குறைவாக நாளொன்றுக்கு 9 ஆயிரம் கன அடிநீரை திறந்துவிட உத்தரவிடப்பட்டது. ஆனால் இதை கர்நாடகம் ஏற்க மறுத்தது.
கர்நாடகத்தின் நிலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழ்நாட்டுக்கு நாளொன்றுக்கு 9 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகத்துக்கு கர்நாடகம் நீரைத் திறந்துவிட்டாலும் தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது.
அதில், கர்நாடக அணைகளில் போதுமான அளவுக்கு நீர் இருப்பு இல்லை. இதனால் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட இயலாது என்று கூறப்பட்டிருந்தது. இம்மனுவை உடனே விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கர்நாடக தரப்பில் வாதிடப்பட்டது. இதைத் தொடர்ந்து இம்மனு மீது வரும் 8-ந் தேதி திங்கள்கிழமையன்று விசாரணை நடைபெற உள்ளது.
-
கர்நாடகா முதல்வராகிறார் டிகே சிவக்குமார்.. ஜூன் 3ம் தேதி பதவியேற்பு.. சித்தராமையா மகனுக்கு ‘ஜாக்பாட்' -
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
டி.கே.சிவகுமாருக்கு செக்.. ஆட்டத்தை தொடங்கிய சித்தராமையா! ராகுல் காந்திக்கு பறந்த முக்கிய கோரிக்கை! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications