மருமகன் வத்ரா ரொம்பவும் நல்லவர்...: சொல்லிவிட்டார் மாமியார் சோனியா
டெல்லி: தமது மருமகன் ராபர்ட் வத்ரா மீதான புகாரை காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி மறுத்துள்ளார்.
சோனியாவின் மகள் பிரியங்காவின் கணவரான ராபர்ட் வத்ரா மீது நீண்டகாலமாக பல "மர்ம" புகார்கள் சொல்லப்பட்டு வருகின்றன. அவர் என்ன தொழில் செய்து வருகிறார் என்பதே மர்மம் என்கிற அளவுக்கு இந்த புகார் பலமானது. இந்த நிலையில் அர்விந்த் கெஜ்ரிவால் மற்றும் பிரசாந்த் பூஷன் ஆகியோர் நேற்று அதிரடியாக ஒரு புகாரைக் கூறினர். "டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம், வத்ராவுக்கு ரூ.65 கோடி ரூபாய் வட்டியில்லாக் கடன் வழங்கியதாகவும், ரூ.300 கோடி மதிப்புள்ள நிலங்களை ரூ.5 கோடிக்கு வழங்கியதாகவும், அதற்கு பிரதிபலனாக காங்கிரஸ் ஆளும் டெல்லி, ராஜஸ்தான் மற்றும் அரியானா ஆகிய மாநில அரசுகளிடம் இருந்து நில ஒதுக்கீடு பெற்றதாகவும் கூறியிருந்தனர்.
ஆனால் தமது மகன் மீதான இந்த புகாரை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மறுத்து இருக்கிறார். வத்ரா வர்த்தகம் செய்து வருகிறார். அவர் எந்த தவறோ அல்லது அதிகார துஷ்பிரயோகமோ செய்யவில்லை'' என்று கூறியிருக்கிறார். சோனியாவுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பலரும் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியோ இந்த விவகாரத்தை விடுவதாக இல்லை. சோனியாவின் மருமகனுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமாவை. இது தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் இந்த விவகாரம் எழுப்பப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications