திமுக ஆட்சியில் சொல்லிட்டுத்தானே 'கரண்ட் கட்' பண்ணாங்க- தேமுதிக பலே பேச்சு!
ஈரோடு: 2013ம் ஆண்டில் மின் நிலைமை சீராகும் என்று கூறுகிறது அதிமுக அரசு. ஆனால் 2016ம் ஆண்டு ஆனாலும் கூட அவர்களால் சீரான மின்சாரத்தைத் தர முடியாது என்று தேமுதிக கூறியுள்ளது.
ஈரோட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேமுதிக சட்டசபை கொறடாவான எம்.எல்.ஏ. வி.சி. சந்திரகுமார் பேசுகையில்,
அதிமுக அரசு ஒட்டுமொத்த தமிழகத்தையும் இருண்ட தமிழகமாக ஆக்கி வருகிறது. இதே சென்ற திமுக ஆட்சியில் இரண்டு அல்லது மூன்று மூன்று மணி நேரம்தான் மின்வெட்டு இருந்தது. அதற்கே தேமுதிக ஆகிய நாங்களும், மற்ற எதிர்க்கட்சிகளும் மின்வெட்டை கண்டித்து போராடினோம். அப்போது
திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் மின்வெட்டு எந்த நேரத்தில் நடக்கும் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டு மின்வெட்டு இருந்தது. ஆனால், இப்போது அதிமுக ஆட்சியில் மின்வெட்டு சராசரி ஒரு நாளைக்கு 18 மணி நேரமாகிவிட்டது. எப்போது மின்சாரம் வரும், எப்போது மின்சாரம் போகும் என்ற நிலையே மக்களுக்கு தெரியாமல் உள்ளது.
2013ல் மின்வெட்டு சீராகும் என்று அதிமுக அரசு கூறினாலும், 2016ல் கூட இந்த ஆட்சியில் மக்களுக்கு சீரான மின்சாரத்தை கொடுக்க முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications