நெல்லையில் காங்கிரஸ் அலுவலகம் நாளை முற்றுகை: அணு உலை எதிர்ப்பு கட்சிகள் அறிவிப்பு
நெல்லை: நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை நாளை முற்றுகையிட போவதாக அணு உலை எதிர்ப்பு இயக்க ஆதரவு கட்சிகள் அறிவித்துள்ளன.
இது குறித்து நெல்லை மாவட்ட சிபிஐ மாவட்ட துணை செயலாளர் சேவியர், மா.லெனிஸ்ட் மாநில குழு உறுப்பினர் ரமேஷ், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் லேனா குமார், தமுமுக மாவட்ட தலைவர் மைதீன் பாரூக், பாமக மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன், மாவட்ட அமைப்பாளர் ரவி தெய்வேந்திரன், நாம் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் செந்தில் உள்ளிட்டோர் நிருபர்களை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் கூறியதாவது,
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டம் 400 நாட்களுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதை வழி நடத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயகுமார். இவரது வீடு, பள்ளிகூடம் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று இவரது வீட்டை முற்றுகையிட போவதாக குமரி காங்கிரஸ் கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இதுவரை உதயகுமார் மீது நடத்தப்பட்ட தனிப்பட்ட தாக்குதலுக்கும், இந்த அறிவிப்புக்கும் தொடர்பு இருப்பதாக தெரிகிறது. உதயகுமார் பள்ளியை இடித்தவர்களை போலீசார் இதுவரை கைது செய்யவில்லை.
அவரது வீட்டை முற்றுகையிட போகும் காங்கிரசார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும். காங்கிரஸ் கட்சியினர் இன்று அவரது வீட்டை முற்றுகையிட்டால் நாளை காலை நெல்லை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தை நாங்கள் முற்றுகையிடுவோம். அணு உலை எதிர்ப்பு போராட்டத்தை ஜாதி ரீதியாக பிரித்து ஒடுக்க மாநில அரசு, மத்திய அரசுகள் இணைந்து சதி செய்கின்றன. அந்த சூழ்ச்சிக்கு கட்சிகள் இரையாக கூடாது என்றனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications