பெண் தொடர்பு.. உளவு..: இஸ்ரோ விஞ்ஞானியிடம் மன்னிப்பு கேட்ட அரசியல்வாதிகள்

Subscribe to Oneindia Tamil

Nambi Narayanan
திருவனந்தபுரம் : இஸ்ரோ ரகசியங்களை வெளிநாட்டுப் பெண்களுக்கு விற்க முயன்றதாக தவறுதலாக குற்றம்சாட்டப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணனிடம் அரசியல்வாதிகள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் முன்னிலையில் மன்னிப்பு கோரினர்.

இஸ்ரோவில் பணிபுரிந்த நம்பி நாராயணன் (78) திரவ எரிபொருள் ராக்கெட் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்தார். அப்துல் கலாமுடன் பணியாற்றிய நாராயணன், கடந்த 1994ம் ஆண்டு இஸ்ரோவின் முக்கிய ரகசியங்களை 2 மாலத் தீவுப் பெண்களுக்கு விற்பனை செய்தார் என்று குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக அவரையும், அவருடன் பணிபுரிந்த சக ஊழியர் டி.சசிகுமாரனையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை முதலில் கேரள போலீஸார் விசாரித்தனர். பின்னர் சிபிஐக்கு மாற்றப்பட்டது. தன் பெயரைத் தவறுதலாகச் சேர்த்துக் களங்கம் விளைவித்ததாகக் கூறி, நம்பி நாராயணன் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கில் நம்பி நாராயணனுக்குத் தொடர்பில்லை என்றும், அவருடைய புகழுக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக, ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கும்படியும் கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மன்னிப்பு கோரிய அரசியல்வாதிகள்

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருவனந்தபுரம் பத்திரிகையாளர் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேரள மாநில முன்னாள் முதல்வர் கருணாகரன் மகன் கே.முரளிதரன் மற்றும் எழுத்தாளர் பால் சக்கரியா மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது, புகழுக்கு களங்கம் ஏற்பட்டதற்காக நம்பி நாராயணனிடம், அனைவரும் நேரில் மன்னிப்பு கோரினர்.

இதுகுறித்து பேசிய சர்க்காரியா, அரசியல் கட்சிகள், ஊடகம் மற்றும் புலனாய்வுத் துறையினர் உள்ளிட்டோர் நம்பி நாராயணன் மீது தவறுதலாக குற்றம் சாட்டினர். அவர்மீது தவறாக குற்றம் சாட்டிவிட்டோம் என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும்' என்றார்.

கடந்த சில வருடங்களுக்கு முன் தமிழ் வாரஇதழுக்கு பேட்டியளித்திருந்த நம்பி. நாராயணன், தன்மீது எந்த களங்கமும் இல்லை என்பதை நிரூபித்து குற்றச்சாட்டிலிருந்து மீண்டு வருவேன் என்று கூறியிருந்தார். அதன்படி அவர்மீதான குற்றச்சாட்டு தவறானது என்று தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தவறு செய்யாத இந்த மனிதரை ஊடகங்கள் கற்பனை கலந்த கதைகளை எழுதி வருடகணக்கில் மன உளைச்சலுக்கு ஆளாக்கின என்பது நினைவுகூறத்தக்கது.

ஊடகங்கள் சார்பில் நாமும் இவரிடம் மன்னிப்பு கோருவோம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+