மறுபடியும் முதல்ல இருந்து...! மாறி மாறிப் பேசும் விஜயகாந்த்தை நீங்கள் நம்புகிறீர்களா...?
நாகர்கோவில்: முதலில் தனித்துப் போட்டி, பிறகு தெய்வத்துடன் மட்டும் கூட்டணி, அதன் பின்னர் தொண்டர்களுக்காக அதிமுகவுடன் கூட்டணி, இப்போது சுட்டுப் போட்டாலும் யாருடனும் கூட்டணி சேர மாட்டேன் என்று மாறி மாறிப் பேசி வரும் விஜயகாந்த் பேச்சு கிட்டத்தட்ட அவருக்கே புரியாத நிலையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது.

இதுதான் விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் கோஷம்!
அதிமுக, திமுக கட்சிகள் மக்களை மாற்றி மாற்றி ஏமாற்றி விட்டன. சுட்டுப் போட்டாலும் இனிமேல் இவங்ககூட கூட்டணி வைக்க மாட்டேன் - நாகர்கோவில் கூட்டத்தில் இப்படிப் பேசியுள்ளார் விஜயகாந்த். இதற்கு முன்பு அவர் என்னவெல்லாம் பேசினார்...

தெய்வத்துடன் மட்டுமே கூட்டணி
மதுரையில் வைத்து கட்சியைத் தொடங்கி அறிமுகப்படுத்திப் பேசுகையில், மக்களுடனும், தெய்வத்துடனும் மட்டுமே நான் கூட்டணி வைத்துள்ளேன். தனித்தே போட்டியிடுவேன் - இதுதான் அவர் விடுத்த அப்போதைய ஹாட் அறிவிப்பு. ஆனால் அடுத்து நடந்தது என்ன?

'உங்களுக்காக' 'அவங்க' கூட கூட்டணி
கடந்த சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் கூட்டிய கூட்டத்தில் திரண்டிருந்த தொண்டர்களிடையே நீட்டி முழக்கிப் பேசிய விஜயகாந்த், உங்களுக்கு சந்தோஷம் என்றால், எனக்கும் அதுதான் சந்தோஷம் என்று கூறி அதிமுகவுடன் கூட்டணி வைக்கப் போவதை மறைமுகமாக சுட்டிக் காட்டினார். பின்னர் கூட்டணியும் வைத்தார். எதிர்க்கட்சி அந்தஸ்தையும் பெற்றார்.

மறுபடியும் முதல்ல இருந்து...!
ஆனால் எந்த வேகத்தில் கூட்டணி உருவானதோ அதே வேகத்தில் புட்டுக் கொண்டு வெளியே வந்தார் விஜயகாந்த். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டார்.

சுட்டுப் போட்டாலும் கூட்டணி கிடையாதாம்
இப்போது லேட்டஸ்டாக சுட்டுப் போட்டாலும் கூட்டணி சேர மாட்டேன். தனித்தே போட்டியிடுவேன் என்று அறிவித்துள்ளார். இந்த முறையும் தொண்டர்களின் மரியாதைக் காக்கவே தனித்துப் போட்டி என்றும் அறிவித்துள்ளார்.

ஒருவேளை பாஜகவோடு சேருவாரோ...?
ஆனால் விஜயகாந்த் மனதில் ரகசியமாக ஒரு கூட்டணித் திட்டம் இருப்பதாக கூறுகிறார்கள். அது திமுக அல்லது பாஜகவுடன் அமையலாம் என்பதே. ஒரு வேளை இந்தக் கூட்டணியை விஜயகாந்த் ஏற்படுத்தினால் அதற்கும் தொண்டர்களின் விருப்பத்தின் மீதுதான் பழியைப் போடுவாரோ.... இப்படி மாறி மாறி பேசி வரும் விஜயகாந்த்தை மக்கள் எந்த நம்பிக்கையில் நம்பி வாக்களிக்கப் போகிறார்கள் என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications