பொன்.ராதாகிருஷ்ணன் மீது பாஜக தலைமைக்கு சந்தேகத்தை கிளப்பிய மர்ம கடிதம்

Subscribe to Oneindia Tamil

Pon Radha Krishnan
சென்னை: தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மீது கட்சி தலைமைக்கு சந்தேகத்தை கிளப்பும் வகையிலான ஒரு மர்மக்கடிதம் உலா வருவதாக கூறப்படுகிறது.

தமிழக மாநில பாஜக தலைவராக இருப்பவர் பொன்.ராதாகிருஷ்ணன். இவருக்கு தமிழக அரசியலும், பாஜக தலைமை அமைப்பிலும் அதிக செல்வாக்கு உண்டு. இந்த நிலையில் பொன்.ராதாகிருஷ்ணனை குறித்து புகார்கள் அடங்கிய ஒரு கடிதம் பாஜக கட்சி வட்டாரத்தில் வலம் வருவதாக தெரிகிறது.

இந்த கடிதம் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கும், டெல்லி தலைமை அலுவலகத்திற்கும் சென்றுள்ளதாம். ஆனால் இதை யார் அனுப்பியது என்பது மர்மமாகவே உள்ளதாம். இந்த கடித்தை படித்து பார்த்த பல கட்சி நிர்வாகிகளுக்கு குழப்பமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாம். இது குறித்த தகவல் பொன்.ராதாகிருஷ்ணனின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது குறித்து அவரது ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது,

தமிழகத்தில் விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் தமிழக பாஜக தலைவராக இருந்தால், சிலர் விரும்பியபடி கூட்டணி அமைக்க முடியாது. மேலும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு சீட் பெற முடியாது. எனவே இது போன்ற மர்ம கடிதத்தை எழுதி பலருக்கும் அனுப்பி உள்ளனர்.

அடுத்த தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தால், பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்று டெல்லிக்கு சென்று மத்திய அமைச்சராக வாய்ப்புள்ளது. இதனால் மற்றவர்களுக்கு அந்த வாய்ப்பு பறிபோய்விடும். எனவே இதை கெடுக்கும் வகையில் சிலர் இது போன்ற சதியில் ஈடுபட்டுள்ளனர்.

பொன்.ராதாகிருணஷ்ணின் உழைப்பு, தலைமை மீது உள்ள விசுவாசம் ஆகியவை குறித்து பாஜகவிற்கு நன்றாக தெரியும். எனவே இது போன்ற மர்மக்கடிதங்கள், அவரது எதிர்கால அரசியல் பாதிக்கப்படாது என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+