செளதி அரேபியாவில் தமிழர் மர்மச் சாவு- உடலை மீட்டு தர தாய் கோரிக்கை
கடலூர்: சவுதி அரேபியாவில் மர்மமான முறையில் இறந்த கடலூரை சேர்ந்த வாலிபரின் உடலை மீட்டு தருமாறு, அவரது தாயார் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை அடுத்த சிங்காரகுப்பம் கிராமத்தில் வசிப்பவர் அம்பிம்கைதாசன். இவரது மகன் சுந்தர்ராஜன்(26). கடந்த மாதம் 25ம் தேதி கத்தார் நாட்டிற்கு ஓட்டுநர் வேலைக்காக சென்றார். அங்கு 4 நாட்கள் தங்க வைக்கப்பட்ட அவர், அதன்பிறகு சவுதி அரேபியாவுக்கு அழைத்து செல்லப்பட்டார்.
சவுதி அரேபியாவில் இருந்து கடந்த 13ம் தேதி கடலூரில் உள்ள தனது பெற்றோருக்கு, சுந்தர்ராஜன் போன் செய்து பேசினார். அப்போது அவர், சவுதிஅரேபியாவில் உள்ள பாலைவனத்தில் தான் ஒட்டகம் மேய்த்து வருவதாகவும், தான் மேய்த்த ஒட்டகக்குட்டி இயற்கையாகவே இறந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
மேலும் தனக்கு அங்கு உணவு அளிக்காமல் கஷ்டப்படுத்துவதால், அங்கு இருக்க பயமாக இருப்பதால் விரைவில் இந்தியாவிற்கு அழைத்து செல்லுமாறும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் போன் செய்த அடுத்த நாளே, சுந்தர்ராஜன் வேலை செய்த இடத்தில் இருந்து, அவர் இறந்துவி்ட்டதாக போன் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
எனவே வெளிநாட்டிற்கு சென்று மர்மமான முறையில் இறந்த தனது மகனின் முகத்தை கடைசியாக பார்க்கும் வகையில், அவரது உடலை மீட்டு தர வேண்டும் என்று அவரது தாய் விஜயலட்சுமி, கடலூர் கலெக்டரிடம் மனு அளித்துள்ளார். விஜயலட்சுமியின் மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உடனடியாக அதன்மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications