சென்னையி்லும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பு: முதல்வருக்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் நன்றி
சென்னை: சென்னையில் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பை இன்று முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். இதற்கு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் சங்கத்தினர் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு கேபிள் டிவி அரசு உடமையாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3ம் தேதி முதல்வரின் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் துவங்கப்பட்டது.
இதன்மூலம் சென்னையை தவிர மற்ற 31 மாவட்டங்களிலும் அரசு கேபிள் டிவி சேவை துவக்கப்பட்டது. இதன்மூலம் குறைந்த கட்டணத்தில் தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் டிவி சேனல்களை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் அரசு கேபிள் டிவி சேவையை துவங்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டு வந்தது.
நுங்கம்பாக்கம் பகுதியில் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் உள்ளது. அந்நிறுவனத்தின் மூலம் சென்னை மக்களுக்கு கேபிள் டிவி வழங்கும் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது.
இதன் பணிகள் முடிவடைந்த நிலையில் இன்று சென்னையில் முதல்வர் ஜெயலலிதா தலைமை செயலகத்தில் இருந்தவாறு வீடியோ கான்பிரன்சிங் முறையில் அரசு கேபிள் டிவி சேவையை துவக்கி வைத்தார். இதனால் நுங்கம்பாக்கம் பகுதியில் உடனடியாக அரசு கேபிள் டிவி சேனல்களை மக்கள் பார்க்க முடிந்தது.
இந்த சேவை படிப்படியாக சென்னை மாநகர் முழுவதும் விரிவுப்படுத்தப்பட உள்ளது. சென்னை மாநகரில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் பதிவு செய்துள்ள சுமார் 2 ஆயிரம் கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்கு லட்சக்கணக்கான செட்-டாப் பாக்ஸ்களை வழங்க வேண்டியுள்ளது.
இதற்காக ரூ.500 முன்பணம் செலுத்தி பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறையில் செட்-டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளது. கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் செட் டாப் பாக்ஸ் பெற முன்பணம் செலுத்த வரும் 25ம் தேதி கடைசி நாள் ஆகும்.
வாடிக்கையாளர்களுக்கு செட்-டாப் பாக்ஸ் அளிக்கும் பணி முடியும் வரை, துவக்கத்தில் 'அனலாக்' தொழில்நுட்பத்தில் 80 சேனல்கள் ஒளிபரப்படும். அதன்பிறகு சேனல்களின் எண்ணிக்கை படிபடியாக அதிகரிக்கப்படும். அனைவருக்கும் செட்-டாப் பாக்ஸ் கொடுத்த பிறகு அரசு கேபிள் டிவி இணைப்பு பெற்றவர்களும் அனைத்து சேனல்களையும் துல்லியமாக பார்க்க முடியும் என்றார்.
முதல்வருக்கு நன்றி:
சென்னையில் அரசு கேபிள் டிவி ஒளிப்பரப்பு துவங்க நடவடிக்கை எடுத்த முதல்வருக்கு, கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
ஆடுவோமே பள்ளு பாடுவோமே, ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமே என்று பாடிய மகாகவியின் வார்த்தைகள் இன்று கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நெஞ்சில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கேபிள் டிவி தொழிலை முதன் முதலாக சட்டப்பூர்வமாக்கி தந்து இந்தியாவிற்கே வழி காட்டியாக விளங்கியவர் முதல்வர் ஜெயலலிதா.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தை தொடங்கி வெற்றி கண்டு உலக அரசுகளுக்கே வழி காட்டிய உன்னதர் முதல்வர் ஜெயலலிதா. அரசு கேபிள் டி.வி. குறைந்த கட்டணத்தில் பொது மக்களுக்கு வழங்கப்படும். கடைகோடி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் காப்பாற்றப்படுவார்கள் என்ற ஜெயலலிதாவின் தேர்தல் வாக்குறுதி இன்று பூரண மாக்கப்பட்டுள்ளது. அதற்காக ஜெயலலிதாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
வராது என்றார்கள் வல்லவர்கள், வந்தது அரசு கேபிள் டி.வி. தராது என்றார்கள் தரகர்கள். குறைந்த விலையில் வந்தது அரசு கேபிள் டிவி பெறாது கட்டண சேனல்களை என்றார்கள். கட்டண சேனல்கள் எல்லாம் அரசுக்கு கட்டுப்பட்டு தங்கள் சேனல்களை எல்லாம் தந்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு!












Click it and Unblock the Notifications