பிரஸ் மீட்டில் கெஜ்ரிவாலை குடைந்தெடுத்த முன்னாள் சகா!

காசியாபாத்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றை கெஜ்ரிவால் நடத்தினார். அப்போது மும்பையைச் சேர்ந்த அன்னி ஹோக்லி என்ற பெண், கெஜ்ரிவாலின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? மகாத்மா காந்தி வழியில் போகிறாரா? அல்லது புரட்சி நடத்துகிறாரா? என்ற கேள்விகள் அடங்கிய துண்டு பிரசுரத்தை அந்த செய்தியாளர் சந்திப்பு நடைபெற்ற இடத்தில் விநியோகித்தார். பிரஸ் மீட்டில் அந்தப் பெண் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார் கெஜ்ரிவால்.
அவரும் விடுவதாக இல்லை. பிரஸ் மீட் முடிந்து வெளியே வந்த கெஜ்ரிவாலிடம், புரட்சியைப் பற்றி பேசுகிற யாரும் பிரச்சனை வந்தவுடன் ஓடக் கூடாது. ஆனால் நீங்களோ பிரச்சனை வந்தவுடன் ஓடிப்போய்விடுகிறீர்கள்.. சல்மான் குர்ஷித் விவகாரத்தில் மாற்றுத் திறனாளிகளை வைத்துக் கொண்டு போராடினீர்.. முடிவு கிடைக்காமல் போராட்டத்தை முடிக்க மாட்டேன் என்று டெல்லியில் உட்கார்ந்தீர்.. அப்புறம் திடீர்னு ஃபரூக்காபாத் போய் போராடப் போகிறேன் என்று அறிவித்திருக்கிறீர்கள்... டெல்லியில் ஆதரவு இருக்கு.. அதனால தலைவராகலம்னு நினைக்கிறீங்க என்று நேருக்கு நேர் முகத்திலடித்தாற்போல் சொல்லிவிட்டார். கெஜ்ரிவால் ஆடிப்போய் டெல்லிக்கு வாங்க பேசலாம் என்றார். ஆனால் அந்தப் பெண்ணோ நான் மும்பையிலிருந்து வருகிறேன்.. அங்கெல்லா வர முடியாது என்று சொல்லிவிட்டார்.
எப்படியெல்லாம் கேள்வி கேட்டார் கெஜ்ரிவால்...அவரையே மடக்கி முழிக்க வெச்சுட்டாங்களே!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications