சன் டிவி புதிய ஐபிஎல் அணி வாங்கியதில் மெகா ஊழல்: சொல்கிறார் லலித் மோடி

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கேற்ற டெக்கான் சார்ஜர்ஸ் அணி, வீரர்களுக்கு சம்பளம் அளிக்க முடியாமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்தது. இதனால் பிசிசிஐயின் விதிமுறைகளை மீறியதாக கூறி, அந்த அணி ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டது. இந்த நிலையில் ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய ஐபிஎல் அணியின் ஏலம் நேற்று மும்பையில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு சன் டிவி குழுமம், ஆண்டிற்கு 85.05 கோடி மதிப்பில் புதிய அணியின் உரிமையை வாங்கியது. இந்த நிலையில் முன்னாள் ஐபிஎல் தலைவர் லலித் மோடி புதிய குற்றச்சாட்டு ஒன்றை எழுப்பி உள்ளார்.
இது குறித்து லலித் மோடி, டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின்(பிசிசிஐ) தலைவர் சீனிவாசனின் நட்பு நிறுவனமான சன் டிவி குழுமத்திற்கு, புதிய ஐபிஎல் அணியின் உரிமை அன்பளிப்பாக அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக சன் டிவி குழுமம் புதிய ஐபிஎல் அணியை வாங்கலாம் என்ற நான் நினைத்தேன். அதை விரும்பிய சீனிவாசனின் ஆசை தற்போது நிறைவேறி உள்ளது. இதைவிட ஒரு பெரிய ஊழலை எங்கும் பார்க்க முடியாது.
சீனிவாசனின் நண்பருக்கு பிசிசிஐ ஒரு ஐபிஎல் அணியை அன்பளிப்பாக அளித்துள்ளது. ஒரு ஐபிஎல் அணியை வாங்க சகாரா 370 மில்லியன் டாலர்கள் முதலீடு செய்தது. ஆனால் சன் டிவி குழுமத்திற்கு இவ்வளவு குறைந்த விலைக்கு அணி கிடைத்துள்ளது. அது எப்படி, ஏன்?
அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் நிச்சயமாக இந்தியன் சிமெண்ட்ஸின் கீழ் தான் நடைபெறும். இதற்கான முயற்சியில் இந்தியன் சிமெண்ட்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
இது குறித்து தெரிந்து கொள்ள சன் டிவி குழுமம் மற்றும் இந்தியன் சிமெண்ட் ஆகிய நிறுவனங்களுக்கு இடையிலான பொதுவான பங்குத்தாரர்கள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும். இரு நிறுவனங்களுக்கும் நிச்சயம் பொதுவான பங்குத்தாரர்கள் இருப்பார்கள் என்று டுவிட்டரில் லலித் மோடி தெரிவித்துள்ளார்.
-
"தல" தோனி, ரோஹித் வரிசையில் படிதார்.. சாம்பியன்ஷிப்பை விட பெரிய சாதனை படைத்த ஆர்சிபி.. கலக்கல் -
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications