வருகிறது தீபாவளி.. வேட்டைக்கு ரெடியாகும் தனியார் ஆம்னி பேருந்துகள்...

ரயில் மற்றும் பேருந்துகளில் முன்பதிவுகளுக்கு இனிவாய்ப்பில்லை! இதனால் வேறுவழியே இல்லாமல் தனியார் பேருந்துகளைத்தான் நாடியாக வேண்டியிருக்கிறது. இந்த "தேடலை" பெரும் முதலீடாக்கி விடுகின்றனர் தனியார் பேருந்துகள்! இவைகளைக் கைவிட்டால் ஊருக்குப் போக முடியாத நிலையைத்தான் எதிர்கொள்ள நேரிடும்!
கட்டண புகார்
பொதுவாக பண்டிகைகாலங்களில் தனியார் பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசிப்பதாக புகார் எழும்போதெல்லாம் பறக்கும் படை, தனிப்படை அமைப்பதாக சொல்வது உண்டு. ஆனால் எல்லாமே கண் துடைப்புதான்!
கட்டண விவரம்
பொதுவாக தென்மாவட்டங்களுக்கு செல்வோர் நேரடிப் பேருந்து கிடைக்கவில்லை எனில் எப்படியாவது திருச்சி வரை போய்விட வேண்டும் என்றுதான் நினைப்பர். அப்படி திருச்சிக்கு அரசுப் பேருந்துகளில் ரூ235தான் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது
ஆனால் வழக்கமாக தனியார் பேருந்துகளில் சராசரியாக ரூ500ல் தொடங்கி ரூ700 வரை கூட்டிவிடுவர்! பண்டிகைக் காலங்களில் நள்ளிரவு நேரத்தில் இன்னும் இது உச்சத்தைத் தொடும்!
மதுரைக்கு அரசுப் பேருந்தில் ரூ335-ல் தனியார் பேருந்துகளிலோ ரூ600 தொடங்கி ரூ800ஐத் தாண்டிவிடுகிறது!
நெல்லைக்கு அரசுப் பேருந்தில் ரூ440 எனில் இந்த தனியார் பேருந்துகள் ரூ700 தொடங்கி ரூ900 வரை கட்டணம் நிர்ணயிக்கின்றனர்!
மேற்குப் பகுதியான கோவைக்கும் கிட்டத்தட்ட ரூ600 தொடங்கி ரூ800 வரை வசூலித்து விடுகின்றனர்!
வழக்கமான நாட்களிலேயே இந்த நிலைமை எனில் பண்டிகைக் காலங்களில் ரூ1000 வரை கட்டணத்தை அழுதாக வேண்டியதுதான் இருக்கும்! இதில் உயிருக்கு உத்தரவாதம் என்பதையெல்லாம் நினைத்தேப் பார்க்கக் கூடாது.
சராசரியாக பண்டிகைக் காலங்களில் இந்தத் தனியார் பேருந்துகள் அடிக்கும் கொள்ளைக்கு எப்பவாவது முடிவு வராதா? திரும்பி ஊருக்குப் போகும்போதாவது அரசு வண்டி கிடைக்காதா? என்ற ஏக்கத்துடன் பயணிப்போர்தான் அனேகம்! திருச்சி, மதுரை பேருந்துகளில் முண்டியடித்து ஏறுவோரும் வேண்டுதலும்கூட இதுவே!












Click it and Unblock the Notifications