அர்ச்சகர்களுக்கு பஞ்சகச்சம், குடுமி 'கம்பல்சரி'... இந்து அறநிலையத்துறை உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சேலம்: கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், உடை, சிகை அலங்காரம் போன்றவற்றில் ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று இந்து அறநிலையத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான சுற்றறிக்கை ஒன்றை இந்து அறநிலையத்துறை ஆணையர் அனுப்பியுள்ளார்.

தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபை நிறுவனத்தலைவர் ஆ.ராதாகிருஷ்ணன் அரசுக்கும், சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையருக்கும் 25 அம்ச கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அனுப்பினார். அதில் ஒன்று, திருக்கோவில்களில் அர்ச்சகர்களாக பணியாற்றி பூஜையில் ஈடுபடுபவர்கள், இந்து கோவில்களில் ஆச்சாரப்படி உடை, சிகை அலங்காரம் செய்வதில்லை என்றும், அதை ஒழுங்குபடுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை ஆய்வு செய்த சென்னை இந்து அறநிலையத்துறை ஆணையர் தமிழகத்தில் உள்ள அனைத்து திருக்கோவில்களின் இணை ஆணையர்கள், செயல் அலுவலர்கள், உதவி ஆணையர்கள் ஆகியோருக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதில்,

தமிழ்நாடு திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் பல்வேறு கோரிக்கை அடங்கிய மனு அளித்துள்ளார். அந்த கோரிக்கைகளில் ஒன்றாக அனைத்து திருக்கோவில்களிலும் ஆச்சாரப்படி உடை (பஞ்ச கச்சவேட்டி), சிகை (குடுமி போடுதல்) அலங்காரம் செய்த அர்ச்சகர்களை மட்டும் பூஜை செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, திருக்கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள் தங்கள் திருக்கோவில்களின் பழக்க வழக்கப்படி ஆச்சாரப்படி உடை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சிகையினையும் அந்தந்த திருக்கோவில்களின் வழக்கப்படி அனுசரித்து சிகை தரிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

எனவே, இது தொடர்பாக அந்தந்த திருக்கோவில்களின் பழக்க வழக்கங்களின்படி நடைமுறைப்படுத்தி கண்காணித்து வர அனைத்து சார்நிலை அலுவலர்களையும் அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+