'நிலம்' புயல் சென்னை அருகே இன்று கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் மையம் கொண்டிருக்கும் நிலம் புயலானது தென்கிழக்கில் இருந்து வடமேற்கு நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகலில் இருந்து மாலைக்குள் சென்னைக்கு தெற்கே கரையைக் கடக்கும்.
அதாவது சென்னைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையே அனேகமாக மகாபலிபுரம் அல்லது கல்பாக்கம் கடற்பரப்பில் புயல் கரையைக் கடக்கலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
புயல்களுக்குப் பெயர் பிறந்த கதை
குழந்தைகளுக்குப் பெயர் சூட்டுவதைத்தான் நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இப்போது புயல்களுக்கும் சூப்பராக பெயர் சூட்ட ஆரம்பித்து விட்டனர். ஆனால் இது இன்று நேற்று நடப்பதல்ல. கடந்த 1945ம் ஆண்டு முதலே புயல்களுக்குப் பெயர் சூட்டி வருகின்றனர்.
ஒவ்வொரு பிராந்தியத்திற்கேற்ப அந்தந்தப் பகுதிகளில் உள்ள நாடுகள் இணைந்து இந்த பெயர்களைச் சூட்டி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வங்கதேசம், இந்தியா, மாலத்தீவுகள், இலங்கை, பாகிஸ்தான், தாய்லாந்து, மியான்மர், ஓமன், ஆகிய நாடுகள் இணைந்து பெயர்களை முடிவு செய்கின்றன. இந்தப் பெயர்கள் ஒவ்வொன்றாக சூட்டப்பட்டு வருகின்றன.
கடைசியாக முர்ஜான் என்ற புயல் இப்பிரதேசத்தைத் தாக்கியது. இதப் பெயரை வைத்த நாடு ஓமன். இந்தப் புயல் அரபிக் கடலில் உருவாகி சோமாலியா பகுதியில் கரையைக் கடந்தது.
நிலம் - பாகிஸ்தான் புயல்
இந்த சீசனில் முதல் முறையாக இந்தியப் பகுதியில் ஒரு புதிய புயல் உருவாகி இருக்கிறது, வங்கக் கடலில் நிலை கொண்ட காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது புயலாக உருவெடுத்திருக்கிறது. இப் புயலுக்கு நிலம் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்தப் பெயரை சூட்டிய நாடு பாகிஸ்தான் ஆகும்.
அடுத்த புயல் வரும்போது அதற்கு மகாசேன் என்று பெயர் சூட்டப்படும். இந்தப் பெயரை சூட்டிய நாடு இலங்கை.
-
Annamalai: பாஜக தலைவர்களுக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை! அண்ணாமலை உருக்கம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications