தேமுதிக எம்எல்ஏவைத் தொடர்ந்து விஜயகாந்த்தும் கைதாவாரா?

சென்னை விமான நிலையத்திற்கு வந்த விஜயகாந்த்திடம், ஜெயா டிவி செய்தியாளர் பாலு அவரது கட்சி எம்.எல்.ஏக்கள் முதல்வர் ஜெயலலிதாவை போய்ப் பார்த்தது குறித்து கேட்டபோது நாயே நாயே என்று அசிங்கமாகப் பேசினார் விஜயகாந்த். மேலும் போய்யா என்றும் பேசினார். அடிக்கவும் கையை ஓங்கினார். அவரது மனைவி கட்டுப்படுத்தப் பார்த்தும் விஜயகாந்த்தின் கோபம் தணியவில்லை. இந்த நிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ அனகை முருகேசன் செய்தியாளர் பாலுவை கீழே தள்ளி விட்டார்.
இதுகுறித்து கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் விஜயகாந்த், அனகை முருகேசன் ஆகியோர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார் விஜயகாந்த். இந்த நிலையில் நேற்று அனகை முருகேசனை போலீஸார் கைது செய்தனர். இதனால் விஜயகாந்த்தும் கைது செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications