டெங்கு காய்ச்சல்: 25 பேர் கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி!
கடலூர்: டெங்கு காய்ச்சல் தாக்கிய 25 பேருக்கு கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிப்பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தினமும் தனியார் மருத்துவமனைகளில் அதிகளவில் உள்நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளிய மக்கள் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து கடலூர் மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மனோகரன் கூறியதாவது,
கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் கொசு வலைகள் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் டாக்டர்கள் நியமிக்கப்பட்டு நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சை தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது.
தற்போது இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 25 பேர் தனி பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள் அனைவரும் உடல் நலம் தேறி வருகின்றனர். டெங்கு காய்ச்சல் கண்டு யாரும் பயப்பட தேவையில்லை. சந்தேகம் கொண்டவர்கள் உடனடியாக அரசு மருத்துவமழைக்கு வந்து சிகிச்சை பெற வேண்டும் என்றார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications