டெல்லி தரும் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்குத் தர முடியாது: மத்திய அரசு கைவிரிப்பு

டெல்லி மாநில அரசு, உபரியாக ஒப்படைக்கவுள்ள மின்சாரத்தை, தமிழகத்துக்கு வழங்க வேண்டுமென, முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதினார்.
ஆனால் மின் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால், தமிழகத்திற்கு உபரி மின்சாரத்தை வழங்குவது சாத்தியமில்லை, என, மத்திய மின் துறை இணை அமைச்சர் வேணுகோபால் தெரிவித்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் வழங்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய மின்சார சட்டம் பிரிவு (37/38) கீழ் உபரி மின்சாரம் இருக்கும் ஒரு மாநிலம், மின்பற்றாக்குறையில் தவிக்கும் மாநிலத்துக்கு மின்சாரம் வழங்கும் அடிப்படையில் இன்று உச்சநீதிமன்றத்தில் தமிழகத்தின் தலைமை செயலாளர் சார்பில் கடந்த மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. நீதிமன்றத்தில் ஆஜரான மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல், உபரி மின்சாரத்தை டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு எடுத்துச் செல்வதில் சிக்கல்கள் இருப்பதாக நீதிபதிகள் முன்பு தெரிவித்தார்.
அட்டர்னி ஜெனரலின் பதிலைக் கேட்ட நீதிபதிகள் இது குறித்து மத்திய அரசு பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யவேண்டும். டெல்லி அரசு ஒப்படைக்கும் உபரி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்குவதில் உள்ள சிக்கல் பற்றி அறிக்கையினை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
மத்திய அரசு தனது அறிக்கையை 26ம் தேதி தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இதனையடுத்து வரும் 29 ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications