காதலியை திருமணம் செய்ய அழைத்து வந்த காதலன் திடீரென விஷம் குடித்து மரணம்

Subscribe to Oneindia Tamil

தேவகோட்டை: திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி தமது காதலியை அழைத்துக் கொண்டு சென்ற காதலின் அவள் முன்பே விஷம் குடித்து இறந்து போன சம்பவம் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அந்தோணிராஜ், அதே ஊரைச் சேர்ந்தா அந்தோணிமேரி என்ற பெண்ணை காதலித்திருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரியில் உள்ள பெரியப்பா வீட்டுக்குப் போய் திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறி ஊரைவிட்டு இருவரும் ஓடிப்போயுள்ளனர். ஆனால் புதுச்சேரி போகாமல் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டைக்குப் போனது காதல் ஜோடி. அங்கு அந்தோணிராஜின் அண்ணன் இருப்பதாகக் கூறி அழைத்து சென்றிருக்கிறார் காதலியை. ஆனால் திடீரென தேவகோட்டையில் போய் இறங்கியவுடன் என்ன நினைத்தாரோ காதலி முன்பே விஷம் குடித்து மயங்கி விழுந்துவிட்டார் அந்தோணிராஜ். பின்னர் அவரது உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆனால் சிகிச்சை பலனின்றி அந்தோணிராஜ் உயிரிழந்துவிட்டார். இருதரப்பு குடும்பத்தினரும் தேவகோட்டைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கையை மேற்கொள்ள போலீசார் முடிவு எடுத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+