டெல்டா விவசாயிகளுக்கு 'பரிகார’ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: கி.வீரமணி

அவரது அறிக்கை விவரம்:
குறுவை சாகுபடி விடுபட்டு, சம்பா சாகுபடிக்கும் காவிரி நீர் கிட்டாமல் போய்விடுமோ என்ற நிலையில், தமிழக அரசும், முதல் அமைச்சரும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு, முழு அளவு கர்நாடகம் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புப்படியும், காவிரி நதி நீர் ஆணையத்தின் ஆணைப்படியும் எஞ்சிய நீரைத் தமிழகத்திற்குத் தரவில்லையென்றாலும்கூட, ஓரளவு கிடைக்கும்படிச் செய்தது, ஓரளவு டெல்டா விவசாயிகளுக்கு நிம்மதியைத் தரும் நிலை ஏற்பட்டுள்ளது!
எதிர்பாராத மழை வரவேற்க வேண்டிய அளவில் இருந்தது துவக்கத்தில். ஆனால் சில பகுதிகள் - குறிப்பாக கீழத் தஞ்சை மாவட்டம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டப் பகுதிகளில் சம்பா பயிரிடப்பட்ட நிலப் பகுதிகளில் அளவுக்கு அதிகமான மழை நீரில் பயிர்கள் மூழ்கிப் பயனற்று, அழுகி கையை விட்டுச் சென்றுவிட்ட அவல நிலையை உண்டாக்கி விட்டது விவசாயிகளுக்கு.
இச்சேதம் பற்றி வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பதாகச் செய்திகள் வந்துள்ளன; இது போதாது. உடனடியாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு ஒன்றை தமிழக முதல்வர் அப்பகுதிகளுக்குச் சென்று நேரில் பார்வையிட்டு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களோடு கலந்தும், விவசாயிகளையும், அவர்கள் பிரதிநிதிகளைச் சந்தித்தும் சேதாரங்களைக் கணக்கிட்டு, அதற்குரிய நிவாரணத்தை உடனே வழங்கிட போர்க் கால அடிப்படையில் செயல்பட வேண்டும்.
இப்படி மழை வரும்போது, நிலங்களில் தண்ணீர்த் தேங்கி பயிர்கள் அழுகுவதற்கு மூல காரணம் - சரியான நேரத்தில், தூர்வாருதல், மற்றைய மராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படாமையே என்று விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறது. அதிலும் தக்க கவனத்தை தமிழக அரசும், வேளாண்துறை, பொதுப்பணி மற்றும் பாசனத் துறையும் கவனித்து ஆவன செய்தல் அவசியமாகும்.
இதற்கிடையில் நரிமணம் பெட்ரோலியப் பகுதிக்குச் செல்லும் எண்ணெய்க் குழாய்களில் ஏற்பட்ட கசிவுகளால், கீழ்வேளூர் பக்கம் உள்ள சில கிராம நிலங்கள் வேளாண்மைப் பயிர்கள் முளைக்க முடியாத - சுற்றுச் சூழலுக்கும் புறம்பான நிலை ஏற்பட்டமையைப்பற்றி மத்திய இணை அமைச்சர் திருமதி ஜெயந்தி நடராசன் அவர்கள் உடனடியாக அப்பகுதிக்குச் சென்று, நேரில் பார்வை யிட்டு, விவசாயிகளிடம் குறை கேட்டு, அதற்கடுத்து அவர்களுக்குத் தேவையான நட்ட ஈடு தொகையைக் கொடுக்கவும், மேலும் அந்நிலங்கள் விவசாயத்திற்குப் பயன்படும் வகையில் செப்பனிடும் பணியை ஓ.என்.சி.சி. அமைப்பு (மத்திய எண்ணெய் துரப்பண அமைப்பு) செய்ய வேண்டுமென அறிவுறுத்தியிருப்பதும் மிகவும் பாராட்டத்தக்க செயல் ஆகும்!
தஞ்சை மாவட்ட- காவிரிப்பகுதி விவசாயிகளுக்கு அடுக்கடுக்காக இப்படி இயற்கைத் தொல்லைகளும், துன்பங்களும் வருவது வேதனைக்குரியது.
என்ன செய்வது? தவிர்க்க இயலாததை எதிர் கொள்ளத்தானே வேண்டும்?
மத்திய, மாநில அரசுகள்
மத்திய, மாநில அரசுகள்தான் அவர்களது மனக் காயங்களுக்குத் தக்க 'பரிகார நடவடிக்கைகள்' மூலம் மருந்திட முன் வர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளுகிறோம் என்று அதில் கேட்டுக் கொண்டுள்ளார்.
பெரியார் திடலை 'மடம்' என்று விமர்சிப்பவர்கள் உண்டு! அவர்கள் வாய்க்கு அல்வா சாப்பிடுவது மாதிரி ‘பரிகார' நடவடிக்கையும் கோருகிறார்களே என்ற குரல் எங்கோ கேட்கிறது!












Click it and Unblock the Notifications