லீவ் போட்டு தனியார் ஹாஸ்பிட்டலில் பிஸியாக டூட்டி பார்த்த அரசு டாக்டர் சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
மதுரை : மதுரையில் விடுப்பு எடுத்துவிட்டு தனியார் மருத்துவமனையில் வேலை பார்த்த்க் கொண்ட டாக்டரை மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.
மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட வெள்ளலூரில் ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இதில் டாக்டராக மணிகண்டன் என்பவர் பணியாற்றி வந்தார். அப்பகுதியில் டெங்கு காய்ச்சல் மற்றும் மர்மக் காய்ச்சலால் பொது மக்கள் கடுமையாக அவதிப்படும் சூழ் நிலையில், டாக்டர் மணிகண்டன் விடுப்பு கடிதம் கொடுத்துவிட்டு, மேலூரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் வேலை பார்த்துள்ளார்.
இது குறித்து மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அந்த மருத்துவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications