கொலையான எஸ்.ஐ ஆல்வின் குடும்பத்துக்கு வைகோ ஆறுதல்- தந்தையின் மருத்துவ செலவை ஏற்றார்

தேவர் குருபூஜை சமயத்தில் பரமக்குடி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த சப் இன்ஸ்பெக்டர் ஆல்வின் சுதன் சிலரால் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் காவல்துறையினர் மத்தியில் கடும் கொதிப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் திசையன்விளையில் உள்ள ஆல்வின் சுதனின் வீட்டுக்கு வைகோ நேரில் சென்று குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். சுதனின் தந்தை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆறுதல் கூறிய வைகோ, அவரது மருத்துவச் செலவு முழுவதையும் ஏற்பதாகவும் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், வன்முறையின்போது படுகொலை செய்யப்படுவோருக்கும், பணியின்போது படுகொலை செய்யப்படுவோருக்கும் ஒரே மாதிரியான நிவாரணத் தொகையை அரசு அளிக்கிறது. இதை அதிகரிக்க வேண்டும்.
படுகொலையானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications