பலாத்கார புகாரில் சிக்கிய பிங்கி பிராம்னிக் ஆண் தான்...! கற்பழிப்பு வழக்குப் பதிவு!!

தடகள வீராங்கனையாக அறியப்பட்டவர் பிங்கி. மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர். இவர் மீது கடந்த ஜூன் மாதம் அனாமிகா ஆச்சார்யா என்ற பெண் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில் பிங்கி ஒரு ஆண். அவரும் நானும் பல வருடமாக சேர்ந்து வாழ்ந்து வருகிறோம். என்னைத் திருமணம் செய்து கொள்வதாக கூறி விட்டு தற்போது மோசடி செய்து விட்டார் பிங்கி. என்னையும் அடித்துச் சித்திரவதை செய்தார். பலமுறை என்னை வற்புறுத்தி அவர் உறவு கொண்டார் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். சிறைக்கும் அவர் அனுப்பப்பட்டார். அவர் ஆணா, பெண்ணா என்பதை அறிய மருத்துவப் பரிசோதனைகளும் நடத்தப்பட்டன.
சோதனைகளின் முதல் கட்டத்தில் அவர் ஆணாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து பிங்கி வேதனையும், ஏமாற்றமும் வெளியிட்டார். இதையடுத்து மேலும் ஒரு சோதனைக்கு காவல்துறை உத்தரவிட்டது.
அதன்படி கொல்கத்தாவில் உள்ள எஸ்எஸ்கேஎம் மருத்துவமனை டாக்டர்கள் குழு பிங்கியிடம் சோதனை நடத்தினர். அதில், பாலின ரீதியாக பிங்கி ஒரு ஆண்தான் என்பதை உறுதி செய்து அறிக்கை அளித்துள்ளனர்.
இதையடுத்து பிங்கி மீது கற்பழிப்பு மற்றும் மோசடிப் புகாரை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.
தடகள வீராங்கனையாக அறியப்பட்ட பிங்கி தற்போது ஒரு ஆண் என்று மருத்துவப் பரிசோதனை உறுதி செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிங்கி மீண்டும் கைது செய்யப்படக் கூடும் என்ற எதிர்பார்பபையும் இது ஏற்படுத்தியுள்ளது.
பிங்கி பிராம்னிக் 2006-ம் ஆண்டு தோகாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் பிரிவு தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவர் ஆவார். இவர் ஆண் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டால் அவரது பதக்கம் பறிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மம்தாவுக்கு மரண அடி.. உடையும் திரிணாமுல் காங்கிரஸ்? தீதீ-ஐ விட்டு செல்லும் 59 எம்எல்ஏக்கள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications