இன்று பெருகும் இன்பம் என்றும் நிலைக்கட்டும் - ஜெ. தீபாவளி வாழ்த்து

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
தீபத் திருநாளாம் தீபாவளி திருநாளை உவகையுடனும் உற்சாகத்துடனும் அனைத்து மக்களும் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நரகாசுரன் எனும் கொடிய அரக்கன் தனது கொடுஞ்செயல்களால் மக்களையும், தேவர்களையும் பெருந்துன்பத்திற்கு ஆளாக்கினான். அக்கொடியவனை திருமால் அழித்த தினமே தீபாவளி திருநாளாக கொண்டாடப்படுகிறது.
தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும் இந்நன்னாளில், மக்கள் புத்தாடைகளை அணிந்து, இறைவனை வழிபட்டு, இல்லந்தோறும் மகிழ்ச்சி பொங்க இனிப்புகளை பரிமாறி, பட்டாசுகளை வெடித்து உறவினர்களுடனும், நண்பர்களுடனும் கொண்டாடி மகிழ்வார்கள்.
இந்தத் தீபத் திருநாளில் எல்லோர் வாழ்விலும் இன்பம் பெருகிட இறைவனின் அருள் கிடைக்கட்டும். இன்று பெருகும் இன்பம் அனைவரிடமும் என்றும் நிலைக்கட்டும். தித்திக்கும் இத்தீபாவளி திருநாளில், மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று இன்புற்று வாழ வாழ்த்தி, அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆளுநர் ரோசய்யா
தமிழக ஆளுநர் ரோசய்யா விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி:
மகிழ்ச்சிகரமான இந்த தீபாவளி திருநாளில் தமிழக மக்களுக்கு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் வாழும் மக்களுக்கு இதய பூர்வமான வாழ்த்துக்களையும், நல்லாசிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த தீபத்திருநாள், நமக்கு அதிகமான அறிவாற்றலையும் வழங்கி, வளர்ச்சி மற்றும் மேன்மையை அளிக்கட்டும். அறியாமை எனும் இருள் அகற்றி, ஒற்றுமை, அர்ப்பணிப்பு உணர்வை ஏற்படுத்தி, நமது நாட்டை உச்சத்துக்கு கொண்டு செல்ல வழிவகுக்கும்.
காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன்
மனித சமுதாயத்தில் ஆணவமும், அகங்காரமும் ஒழிய வேண்டும். ஆனந்தமும், சாந்தமும் நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தும் பண்டிகை தீபாவளி.
இந்தியாவில் கொண்டாடப்படுகிற எந்த விழாவிற்கும் ஒரு காரணமும், ஒரு ஆழ்ந்த உண்மையும் இருக்கும். இந்த விழா கொண்டாடுகிற இந்த தருணத்தில் அதர்மம் ஒழிந்து, ஆதிக்க உணர்வு மறைந்து, ஏற்றத் தாழ்வுகள் நீக்கப்பட்டு எல்லோரும் மகிழ்ந்திடும் ஒரு விழாவாக இவ்விழா அமைய வேண்டும் என்று இன்நன்னாளில் வாழ்த்துகிறேன்.
பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்:
அசுரர் குலத்து நரகாசுரனை வதைத்து தர்மத்தை காத்தான் கண்ணன். நம் தாயகத்தையும், தமிழகத்தையும் காக்க கண்ணனின் வழியில் உறுதி ஏற்போம். நம் பொது வாழ்விலும் தனி வாழ்விலும் தன்னி கரில்லாத தூயவராய் திகழ்வோம். நாட்டை வாட்டும் அல்லல்களை அகற்ற அப்பழுக்கற்ற தேச பக்தராய் தன்னலம் கருதாது உழைப்போம்.
ஜாதி, மத பாகுபாடற்ற சமத்துவ சமுதாயத்தை உருவாக்கவும் லஞ்ச ஊழல் சிறிதுமற்ற நல்லவர்கள் தலைமை ஏற்கவும் இத்தீபா வளித் திருநாளில் உறுதி யேற்போம். தீப ஒளியை நம் வீட்டில் ஏற்றுவது போல் நம் நாடு தீபமாய் ஒளிர நாம் நம்மை அர்ப்பணிப்போம். அனைவருக்கும் அன்பு தீபாவளி வாழ்த்துக்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications