ஆவுடையப்பன் முகத்தில் கொதிக்கும் எண்ணெய் ஊற்றிய மனைவி அமுதா
திருச்செந்தூர்: குடும்பத் தகராறில் கடுப்பான பெண், தனது கணவர் முகத்தில் கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஊற்றி விட்டார்.
திருச்செந்தூரை அடுத்த ஆத்தூர் குட்டிகாட்டை சேர்ந்தவர் ஆவுடையப்பன். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர்.
ஆவுடையப்பனும், அமுதாவும் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருகின்றனர். இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்படும். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இதுபோல் கணவன்-மனைவி-இடையே இதுபோல் பிரச்சனை வெடித்தது. அப்போது அமுதாவை ஆவுடையப்பன் திட்டினார். இதுபற்றி தெரிய வந்ததும் உறவினர்கள் அவர்களை சமாதானப்படுத்தினர். இருந்தாலும் இருவருக்கும் இடையே பிரச்சனை நீறுபூத்த நெருப்பு போல அணையாமல் இருந்தது.
நேற்று முன்தினம் இரவு ஆவுடையப்பன் தூங்க சென்ற பிறகு அமுதா திடீரென வீட்டின் சமையல் அறையில் இருந்த கொதிக்கும் எண்ணெயை எடுத்து ஆவுடையப்பன் முகத்தில் கொட்டினார். இதில் அவரது முகம் வெந்தது.
வலியால் அலறிய சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் அமுதா வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகி விட்டார். இதற்கிடையே வலியால் துடித்துகொண்டிருந்த ஆவுடையப்பனை அக்கம்பக்கத்தினர் சேர்ந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து ஆத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரேஸ்வரி வழககு பதிவு செய்து தலைமறைவான அமுதாவை தேடி வருகிறார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications