விமான நிலையத்தில் ப.சியை போட்டோ எடுக்க முயன்றவர் கைது-ஏற்கனவே விமானத்தை படம் பிடித்தவர்!

டெல்லியிலிருந்து சென்னைக்கு வந்தார் ப.சிதம்பரம். அப்போது விமான நிலைய வாசலில் ஒரு நபர் அவரை புகைப்படம் எடுத்தார். இதையடுத்து அவரைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.
அப்போது அந்த நபரின் பெயர் அமீர் என்றும், கொச்சியைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. இவரிடம் டெல்லி செல்வதற்கான விமான டிக்கெட் இருந்தது.
இதே அமீர்தான் அக்டோபர் 3ம் தேதி சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிய ஏர் இந்தியா ட்ரீம்லைனர் விமானத்தின் உள்ளே புகைப்படம் எடுத்து சிக்கியவர். அவரும், மன்சூர் என்பவரும் தங்களது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்தபோது சக பயணிகளால் பிடிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் விமானத்தின் அழகை படம் எடுத்ததாக கூறியதைத் தொடர்ந்து இருவரையும் விமானத்திலிருந்து இறக்கி விட்டனர் அதிகாரிகள்.
பின்னர் அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக கேரள போலீஸாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் அமீர் மீண்டும் புகைப்படம் எடுத்து சிக்கலில் மாட்டியுள்ளார். இந்த முறை அமீரின் நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடத்த போலீஸார் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது.
கைதான அமீர் என்டிஏ (தேசிய ஜனநாயக அமைப்பு) அமைப்பைச் சேர்ந்தவர் ஆவார். இது கேராளாவில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications