32 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்தியது ஆஸ்திரேலியா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: ஆஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட மேலும் 32 பேர் இன்று இலங்கை திரும்பியுள்ளனர்.
இலங்கையில் தமிழர், சிங்களர் என ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி படகுகளில் ஆஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரி செல்கின்றனர். அப்படி இதுவரை புகலிடம் சென்றோரில் 200 பேரை அந்நாடு மீண்டும் இலங்கைக்கே நாடு கடத்தி வைத்துள்ளது.
இந்நிலையில் மேலும் 32 பேர் இன்று ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டனர். இதுவரை மொத்தம் 232 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றனர்.
இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவோரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்தி ஜாமினில் விடுதலை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications