தூத்துக்குடி, அவிநாசி, கொட்டாம்பட்டி.. 3 விபத்துகள்: 7 பேர் பலி-பார்க்க வந்தவரும் விபத்தில் பலி
தூத்துக்குடி, மதுரை & அவிநாசி: தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே நின்று கொண்டிருந்த வேன் மீது லாரி மோதியதில் வேனில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சாத்தூர் பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 12 பேர் கேரளா சென்றுவிட்டு வேனில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று காலை 5 மணியளவில் கயத்தாறு ராஜாபுதுக்குடி விலக்கு அருகே வந்தபோது வேனில் டீசல் கசிவு ஏற்படே அதை சாலை ஓரத்தில் நிறுத்தினர்.
அப்போது அங்கு வந்த லாரி வேன் மீது மோதியது. இதில், வேனில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர்.
காயமடைந்தவர்கள் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அவிநாசி அருகே லாரி-கார் மோதல்; டிரைவர் பலி:
அதே போல கேரளாவில் இருந்து சேலத்திற்கு மாடு வாங்க 3 வியாபாரிகள் காரில் வந்தனர். அவர்களுடன் சிறுவனும் வந்தான்.
அதிகாலை 3.30 மணி அளவில் அவிநாசி அருகே அவிநாசிலிங்கம் பாளையத்தில் உள்ள மேம்பாலத்தில் வந்தபோது சோப்பு லோடு ஏற்றி வந்த லாரியும் காரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
மோதிய வேகத்தில் லாரி மேம்பாலத்தில் இருந்து பக்கவாட்டில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார் டிரைவர் சுபேதர் பரிதாபமாக உயிரிழுந்தார். காரில் இருந்த சிறுவனை தவிர மற்று 3 பேரும் படுகாயமடைந்தனர். லாரியை ஓட்டி வந்த கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்த ஜானகிராமன் (35) என்பவரும் படுகாயமடைந்தார்.
அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர்.
இந்த இடம் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாக மாறி வருகிறது. கடந்த 1 மாதத்தில் மட்டும் இதுவரை 3 பேர் இதே இடத்தில் இறந்துள்ளனர்.
இந்தப் பாலத்தில் ரிப்ளக்டர் கூட இல்லாதது விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது.
லாரி மீது பஸ் மோதி 2 பேர் பலி-விபத்தை பார்க்க வந்தவர் வாகனம் மோதி பலி:
இந் நிலையில் மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது அரசு பஸ் மோதியதில் 2 பேர் உயிர் இழந்தனர்.
இந்த விபத்து நடந்த இடத்தைப் பார்க்க வந்த ஒருவர் இன்னொரு வாகனம் மோதி பலியானார்.
சேலத்தில் இருந்து கொட்டாம்பட்டி வழியாக திருப்பத்தூர் செல்லும் அரசு பஸ் பள்ளப்பட்டி அருகே வந்த போது, சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில், அரசு பஸ்சின் நடத்துனரான முருகேசனும் (40), இன்னொரு பயணியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இந்த விபத்து நடந்த இடத்தைப் பார்க்க வந்த பெருமாள் (55) வேகமாக சாலையைக் கடந்த போது, ஒரு வாகனம் மோதி சாலையில் உயிரிழந்தார். இந்த விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது. இதை போலீசார் தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications