இந்தியப் பெண் மரணம் எதிரொலி: அயர்லாந்து பிரதமர் அவசர ஆலோசனை!

கர்நாடகாவை சேர்ந்தவர் சவீதா, 31. இவரது கணவர் பிரவீன், அயர்லாந்து நாட்டின் கால்வே நகரில் இன்ஜினியராக உள்ளார்.பல் மருத்துவரான சவீதாவுக்கு, கடந்த மாதம் வயிற்று வலி ஏற்பட்டது. அவரை பரிசோதித்த டாக்டர்கள், "உங்கள் வயிற்றில் வளரும் கரு, இயல்பான நிலையில் இல்லை. இதனால், வலி ஏற்பட்டுள்ளது' என்றனர்.இதைக் கேட்ட சவீதா, "17 வார கருவில் கோளாறு இருந்தால் கலைத்து விடுங்கள்' என்றார். ஆனால், "இது கத்தோலிக்க கிறிஸ்தவ நாடு; கருவை கலைக்க முடியாது' என, டாக்டர்கள் மறுத்து விட்டனர்.
ஒரு கட்டத்தில், சவீதா வயிற்றில் வளர்ந்த சிசு இறந்து விட்டது. தொப்புள் கொடி வழியாக, சவீதாவின் ரத்தத்தில் விஷம் பரவியது. இதனால், இரண்டு வாரங்களுக்கு முன், சவீதா இறந்துவிட்டார்."கரு கலைப்பு செய்திருந்தால், சவீதா உயிர் பிழைத்திருப்பார். அவரது மரணத்துக்கு டாக்டர்கள் தான் காரணம்' என, சவீதா பெற்றோர், வழக்கு தொடர்ந்துள்ளனர்.தற்போது இந்த பிரச்னை பூதாகரமானதையடுத்து, அந்நாட்டு பார்லிமென்டிலும் விவாதிக்கப்பட்டது.
இதனிடையே கருக்கலைப்பு மறுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருக்கலைப்பு விதிகளை சற்று தளர்த்தக் கோரியும் 2 ஆயிரம் பேர் தலைநகர் டப்ளினில் நாடாளுமன்றத்திற்கு வெளியே பேரணி நடத்தினர். இதேபோல், சவிதாவின் மரணத்துக்கு கண்டனம் தெரிவித்து லண்டனில் அயர்லாந்து நாட்டு தூதரகம் எதிரே நேற்று மக்கள் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், சவிதாவின் மரணம் குறித்து விசாரணைக்கு அந்நாட்டு சுகாதாரத்துறை ஜேம்ஸ் ரெய்லி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அயர்லாந்து பிரதமர் எண்ட கென்னி ரேடியோவில் பேசுகையில், கருக்கலைப்பு செய்ய முடியாமல் போனதால் ரத்தம் விஷமாக இந்தியப் பெண் மரணமடைந்துள்ளது. இது துரதிஷ்டவசமானது. கருக்கலைப்பு சட்டத்தில் தீடீர் என்று எந்த முடியும் எடுக்க முடியாது. இது இந்த நாட்டு மக்களின் பன்னெடுங்கால நம்பிக்கை என்றார். மேலும் விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications