ஓட்டுக்காக காதல் திருமணங்களை எதிர்க்கும் ராமதாஸ்: திருமாவளவன் தாக்கு

தர்மபுரியில் நடந்த தலித்களுக்கு எதிரான வன்முறை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து தர்மபுரியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர்,
தர்மபுரியில் 3 தலித் கிராமங்களில் நடந்துள்ள வன்முறைகள் காதல் திருமணங்களால் மட்டுமே நடந்தது அல்ல. திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை. இந்த சம்பவத்தில் திவ்யாவின் தந்தை நாகராஜ் தற்கொலை செய்து கொண்டதில் மர்மம் நீடிக்கிறது. எனவே நாகராஜ் இறப்பு குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்.
திருமணமான தம்பதிகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். தலித்துகளுக்கு எதிராக வன்முறைகள் காவல்துறையின் துணையோடு கட்டவிழ்த்து விடப்படுகிறது. இந்த சம்பவத்தில் 142 பேரை வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதை சம்பந்தப்பட்ட கிராம மக்களே பாராட்டுகின்றனர்.
ஆனால், வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட பெண்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
பாமக நிறுவனர் ராமதாஸ் காதல் திருமணம் தொடர்பாக பேசி வரும் கருத்துகள் உள்நோக்கம் உடையவை. அவர் அரசியல் ஆதாயத்திற்காக பேசி வருகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்காக, அவருடைய கட்சி 6 சதவீத ஓட்டுகள் வைத்திருக்க வேண்டும் என்பதற்காக தமிழகத்தில் உள்ள ஜாதி சங்கங்களை ஒன்றிணைத்து ஜாதிக் கூட்டணி அமைப்பதாக கூறி வருகிறார்.
சட்டசபையில் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே இருப்பதால் தங்களது அங்கீகாரத்தை காப்பாற்றிக் கொள்ளவும் சொந்த நலனுக்காகவும் காதல் திருமண எதிர்ப்பு பிரச்சாரம் செய்து வருகிறார். பிற சாதி இந்துக்களிடையே பகையை பெற்று விட கூடாது என்பதற்காக பேசுகிறார்.
காதல் திட்டமிட்டு செய்வதில்லை. அது தானாக வரக்கூடியது. சாதி மறுப்பு திருமணம் தொடர்பாக காவல் நிலையங்களில் கட்டப்பஞ்சாயத்துதான் அதிக மாக நடக்கிறது. சாதி மறுப்பு திருமணம் மற்றும் காதல் திருமணங்களுக்கு நாங்கள் ஆதரவு அளிப்போம்.
மற்ற சமுதாய பெண்களை தலித்கள் கட்டாயப்படுத்தி திருமணம் செய்ய சொல்வதாக கூறுவதை நிரூபித்தால் நான் முச்சந்தியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்றார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications