நோயாளிகள் குணமடைய மதுரை அரசு மருத்துவமனையில் யாகம் நடத்தியதை எப்படி குறை சொல்லலாம்?: இந்து முன்னணி
மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகள் குணம் பெற யாகம் நடத்தியதை குறை கூறக் கூடாது என்று இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் ஹரி ஆதிசேஷன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை பெரிய மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் விரைவில் நலம் பெறவும், நீண்ட ஆயுள் பெறவும் தன்வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகம் நடத்துவது முட்டாள் தனம் என்றும், யாகம் நடத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுரை மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இந்த கருத்துக்கு இந்து முன்னணி கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
இந்த செயல் மக்களின் நம்பிக்கையில் தலையிடும் செயலாகும். மக்களின் நம்பிக்கையை கேலி செய்வது தவறான அணுகுமுறையாகும். மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தவே யாகம் நடத்தப்படுகிறது. அரசு அலுவலங்களில் பூஜை செய்வதும, யாகம் செய்வதும் வழக்கமான ஒன்று தான். அரசு திட்டங்கள் தொடங்கும் போதும், செயல்படுத்தப்படும் போதும் பூஜை, சடங்குகள் செய்வது நடைமுறையில் உள்ள ஒன்று. அதே போன்று மருத்துவமனைகளில், சிறைகளில் ஜெபம் நடத்த அனுமதிக்கப்படுவதில்லையா? எனவே மதச் சார்பற்ற தன்மை என்ற பெயரில் அதை தடுக்க முயல்வது பெரும்பான்மை மக்களின் மத உணர்வுகளை தடுப்பது ஆகும். எனவே தமிழக முதல்வர் இதில் உடனே தலையிட்டு தகுந்த அறிவுரை வழங்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications