கசாப் மரணத்திற்கு பழிவாங்க கர்நாடகாவையும் குறிவைக்கும் லஷ்கர் இ தொய்பா
பெங்களூர்: கசாபை தூக்கிலிட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கர்நாடகாவை தாக்கக்கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாநிலத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கசாபின் மரணத்திற்கு பழிவாங்க ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலை தாக்கப் போவதாக பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பினர் இ மெயில் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர். அந்த இமெயில் கர்நாடகத்தில் உள்ள இன்டர்நெட் சென்டரில் இருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் கர்நாடகாவையும் தாகக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளதால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக துணை முதல்வர் ஆர். அசோக் கூறுகையில்,
அஜ்மல் கசாபின் மரணத்திற்கு பழிவாங்க கர்நாடகாவை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்ற தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுக்காதபோதிலும் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. மாநிலத்தில் உள்ள முக்கிய இடங்களில் 3,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹூஜி அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில் கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட 15 பேரை டெல்லி போலீசாரிடம் ஒப்படைக்கத் தயார் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications