குழந்தைத் தொழிலாளர்கள் இருந்தால் உரிமையாளருக்கு 2 ஆண்டு ஜெயில்: மசோதா தாக்கல்
டெல்லி: குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் முதலாளிக்கு 2 ஆண்டு சிறைதண்டனை விதிக்கும் சட்டதிருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பள்ளிக்குச் செல்லும் பாலகர்களை அபாயகரமான பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று தற்போது அமலில் உள்ள குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இதற்காக பல தொழிற்சாலைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டு பள்ளிக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.
தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்தை மாற்றி, எந்த தொழிலிலும் குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்த தடை விதிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது. இதன்படி இனி எந்த தொழிலிலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு சேர்த்தால், முதலாளிக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கும் சட்டத் திருத்த மசோதா, மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த ‘குழந்தை தொழிலாளர் தடுப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டத் திருத்த மசோதா'வை, மாநிலங்களவையில் மத்திய தொழிலாளர் துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே செவ்வாய்கிழமை தாக்கல் செய்தார். அந்த மசோதாவில்,"எந்த தொழிலிலும் 14 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலையில் சேர்ப்பதற்கு முழு தடை விதிக்கப்படுகிறது.
அப்படி குழந்தை தொழிலாளர்களை ஈடுபடுத்துவோருக்கு அதிகபட்சம் 2 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், அபாயகரமான தொழிற்சாலைகளில் 18 வயதுக்கு உட்பட்டவர்களை பணிக்கு சேர்க்கவும் தடை விதிக்கப்படுகிறது.
அபாயம் இல்லாத தொழிற்சாலைகளில் வேலைக்கு சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு சர்வதேச தொழிலாளர் விதிமுறைகளின்படி தேவையான வசதிகள் செய்யப்பட வேண்டும்."என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications