மின்வெட்டு எதிரொலி: ஹோட்டல்களில் சட்னி இல்லை, ஜெனரேட்டர்களுக்கு ஓவர் கிராக்கி
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் நிலவி வரும் கடும் மின்வெட்டால் ஜெனரேட்டர்களுக்கு தட்டுப்பாடாக உள்ளது.
தமிழகத்தில் மின்பாற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இரவு, பகல் பாராமல் மின்தடை செய்யப்படுகிறது. இதனால் மக்கள் பகல் பொழுதை எப்படியாவது கழித்துவிட்டாலும் இரவில் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறிய மூல்பபொருட்கள் உற்பத்தி செய்வோரும், கட்டுமானத் தொழில் செய்வோரும் ஜெனரேட்டர்களை மாதக் கணக்கில் வாடகைக்கு எடுத்து பயன்படுத்துகிறார்கள். மேலும் திருமணம் போன்ற வீட்டு விசேஷங்களுக்கும் ஜெனரேட்டரை வாடகைக்கு எடுக்கிறார்கள்.
இதனால் ஜெனரேட்டர்களுக்கு கடும் கிராக்கியாக உள்ளது. நெல்லையில் உள்ள சில வங்கிகள், தனியார் அலுவலகங்களும் ஜெனரேட்டர்களை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வருகின்றன. இப்படி அனைவரும் ஜெனரேட்டர் கேட்பதால் அதற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 1,000 வாட் ஜெனரேட்டரை 12 மணிநேரத்திற்கு ரூ.500க்கு வாடகைக்கு விடுவதாக மேலப்பாளையத்தைச் சேர்ந்த சவுண்ட் சர்வீ்ஸ் உரிமையாளர் மகராஜன் தெரிவித்தார்.
மேலும் 24 மணிநேரத்தில் பெரும்பாலான நேரம் மின்சாரமே இல்லாமல் இருப்பதால் இன்வர்ட்டர்களால் போதிய மின்சாரத்தை சேமிக்க முடியவில்லை. இதனால் மக்கள் சத்தம் குறைவான சிறிய ஜெனரேட்டர்களை பயன்படுத்தத் துவங்கியுள்ளனர். இதனால் இத்தனை நாட்களாக ரூ.35,000க்கு விற்பனையான சிறிய ஜெனரேட்டர்கள் தற்போது ரூ. 85,000 வரை விற்கப்படுகிறது.
ஹோட்டல்களில் மிக்ஸி அல்லது கிரைண்டரில் சட்னி அரைக்கிறார்கள். ஆனால் தற்போது பல மணிநேரம் மின்தடை செய்யப்படுவதால் ஹோட்டல்களில் சட்னி வழங்குவதை நிறுத்தியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications