மின்வெட்டு குறித்து ஏதோ முக்கிய முடிவெடுக்க செயற்குழுவைக் கூட்டுகிறது திமுக!
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் 13ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. மின்வெட்டுப் பிரச்சினை குறித்து அக்கூட்டத்தில் விவாதித்து முக்கிய முடிவெடுக்கப் போகிறார்களாம்.
இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் வருகிற 13-ந்தேதி காலை 10 மணி அளவில் தலைமை செயற்குழு கூட்டம் அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். கூட்டத்தில் மின்வெட்டு பிரச்சினை குறித்து ஆலோசிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு குறித்து ஏதாவது போராட்ட அறிவிப்பை திமுக எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications