குற்றாலம் அருவிகளில் சரண கோஷம்... குவியும் ஐயப்ப பக்தர்கள்!
நெல்லை: குற்றாலம், ஐந்தருவி திற்பரப்பு அருவிகளுக்கு தினமும் சபரிமலை சென்றுவிட்டு திரும்பும் ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

அருவிகளில் குவியும் ஐயப்ப பக்தர்கள்
சபரிமலை சீசனை முன்னிட்டு குற்றாலம், ஐந்தருவி,திற்பரப்பு அருவியில் ஐயப்ப பக்தர்கள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஐயப்ப பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

மார்கழி வரை நெரிசலாகவே இருக்கும்
கார்த்திகை மாத துவக்கத்தில் குறைந்த அளவில் காணப்பட்ட ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. மார்கழி மாத இறுதிவரை ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிதமாக கொட்டும் தண்ணீர்
மலையோர பகுதிகளில் பரவலாக பெய்து வந்த மழை கடந்த சில நாட்களாக பெய்யாததால் ஆற்றில் தண்ணீர் வரத்து குறைந்துள்ளது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டுகிறது. அருவியின் அனைத்து பகுதிகளிலும் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகளும், ஐயப்ப பக்தர்களும் சிரமமின்றி குளித்து செல்கின்றனர்.

குற்றாலநாதர் கோவில்
காலை, மாலை நேரங்களில் வரும் ஐயப்ப பக்தர்கள் அருவியில் குளித்து அருகில் உள்ள குற்றாலநாதர் ஆலயம், இலஞ்சி குமரன் ஆலயம் மகாதேவர் கோயிலில் தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

மாலையில் மின்வெட்டு..பக்தர்கள் தவிப்பு
குற்றாலம், ஐந்தருவி, திற்பரப்பு பகுதியில் தற்போது மாலை 6 மணி முதல் 7 மணி வரை மின்வெட்டு நடைமுறையில் உள்ளதால் இந்த நேரத்தில் அருவி பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் ஐயப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

சோலார் லைட் போடுங்களேன்...
சுற்றுலா பயணிகளின் நலன் கருதி குறிப்பிட்ட பகுதிகளில் சோலார் விளக்குகள் அமைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications