கர்நாடகா திறந்துவிட்ட காவிரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது

காவிரியில் தமிழகத்துக்கு 10 ஆயிரம் கன அடி நீரைத் திறந்துவிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து ஒருநாள் தாமதமாக கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து காவிரி நீரைத் திறந்துவிட்டது. இதற்காக உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா வருத்தமும் தெரிவித்தது.
இந்த நீர் நேற்று தமிழக எல்லையான பிலிகுண்டுவை வந்தடைந்ததா? இல்லையா? என்று சர்ச்சை இருந்து வந்தது. நேற்று காலையே பிலிகுண்டுவை வந்தடைந்தது என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் நேற்று இரவு 6 மணிக்கு பிலிகுண்டுவுக்கு வந்து சேர்ந்தது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்தனர். பின்னர் நேற்று இரவு மேட்டூர் அணையை வந்தடைந்தது.
காவிரியில் கர்நாடகா திறந்த நீரை ஆய்வு செய்வதற்காக மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் மற்றும் ஊழியர்கள், நேற்று காலை முதல் பிலிகுண்டுவில் முகாமிட்டிருந்தனர். கர்நாடகா திறந்த நீர், நேற்று இரவு முதல் தொடர்ச்சியாக வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நிலையில் நீடிக்கும் என எதிர்பார்க்கலாம்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications