மின்தடை எதிரொலி: சீரியல்களில் இருந்து புத்தகங்களுக்கு தாவிய பெண்கள்!
கரூர்: தமிழகத்தில் நிலவி வரும் பல மணிநேர மின்வெட்டு காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பெண்களிடம் மீண்டும் புத்தகம் படிக்கும் பழக்கம் அதிகரித்து வருகின்றது.

மின்வெட்டு
தமிழகத்தில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மின்வெட்டு என்ற சொல்லை அதிக அளவில் பயன்படுத்தியது இல்லை. ஆனால் கடந்த திமுக ஆட்சியில் துவங்கி வைக்கப்பட்ட மின்வெட்டு தமிழக மக்கள் வாழ்வாரத்திற்கே வேட்டு வைத்துவிட்டது.

ஆட்சி மாற்றம்
ஆளும் கட்சிகள் மீது ஊழல் புகார், மத வாதம், ஜாதிக் கலவரம் என பல புகார்கள் மூலம் தான் முன்பெல்லாம் ஆட்சிகள் பறிபோகும். ஆனால் இந்தியாவிலேயே முதல் முறையாக மின்வெட்டு காரணமாக ஆட்சியை இழந்தது திமுக மட்டுமே. எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக அடுத்து ஆட்சியைப் பிடித்தது. ஆனால் அதிமுக ஆட்சியிலும் மின்வெட்டு பிரச்சனை தொடரத் தான் செய்கிறது.

புத்தகங்களை ஓரம் கட்டிய டிவி
ஒரு காலத்தில் பொது மக்களுக்கு அறிவை வளர்க்க புத்தகங்களே பயன்பட்டது. பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய பல்சுவை இதழ்கள் வெற்றிநடை போட்டது. ஆனால் அறிவியல் வளர்ச்சி காரணமாக தொலைக்காட்சி தோன்றியது.

சீரியல் பைத்தியம்
டிவிக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக டிவிகளில் அறிமுகமான குறுந்தொடர்கள் மற்றம் நெடுந்தொடர்கள் பெண்களிடம் அதிக வரவேற்பை பெற்றன. சீரியல்கள் பார்க்க முடியாமல் பெண்கள் இருக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால் புத்தகங்கள், நாவல்கள் விற்பனை குறைந்தது.

மீண்டும் புத்தகம்
ஆனால் தற்போது தமிழகத்தில் அடிக்கடி மின் வெட்டு ஏற்படுவதால் டிவியில் தொடர்ந்து சீரியல்கள் பார்க்க முடியாமல் போனது. சுவாரஸ்யம் விட்டுப்போனது. இதனால் மீண்டும் புத்தக விற்பனை சக்கை போடு போடுகின்றது. குறி்ப்பாக நாவல்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இதையடுத்து, பெண்களை கவரும் வகையில் பல வண்ணங்களில் புத்தங்கள் மீண்டும் உருவாகத் தொடங்கி விட்டன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications