வத்தலக்குண்டு மார்க்கெட்டில் 5 கடைகளுக்கு தீ வைப்பு: பொருட்கள் எரிந்து நாசம்
திண்டுக்கல்: வத்தலக்குண்டு மார்க்கெட்டில் 5 கடைகளுக்கு தீ வைக்கப்பட்டதில் அவை முற்றிலும் எரிந்து நாசமாகின.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் அருள்முருகன்(42). அவர் வத்தலக்குண்டு காளியம்மன் கோவில் பின்புறம் உள்ள மார்க்கெட்டில் வரிசையாக 5 கடைகள் வைத்து நடத்தி வருகிறார். வெங்காயம், காய்கறி மற்றும் பழங்கள் வைத்து விற்பனை செய்து வருகின்றார்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணிக்கு அவரது கடைகளுக்கு யாரோ தீ வைத்துவிட்டுச் சென்றனர். கடைகள் தீப் பிடித்து எரிவதைப் பார்த்ததும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக வத்தலக்குண்டு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
வத்தலக்குண்டு நிலைய அலுவலர்கள் முத்துகிருஷ்ணன், குணசகரன் ஆகியோர் தலைமையில் 2 வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த அனைத்து பொருட்களும் எரிந்து நாசமானது.
இது குறித்து கடையின் உரிமையாளர் வத்தலக்குண்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில், தனது கடைக்கு வேண்டுமென்றே சிலர் தீ வைத்துள்ளனர். இதே போல் ஏற்கனவே 4 முறை தீவைத்து சென்றுவிட்டதாக கூறியிருந்தார்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இது குறித்து காமாட்சிநாதன், சேகர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் தொழில் போட்டி காரணமாக கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications