Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசின் அடுத்த அதிரடி: இலவச ஸ்மார்ட் போன்… எஸ்.எம்.எஸ்சில் ரேசன் தகவல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ‘உங்கள் பணம் உங்கள் கையில்' திட்டத்தை அறிமுகப்படுத்தும் மத்திய அரசு அடுத்த அதிரடியாக 40 கோடி பேருக்கு நவீன வசதிகளுடன் கூடிய இலவச செல்போன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறும் ஏழைகளுக்கு அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக மானிய தொகையை செலுத்தும் நேரடி பண பரிமாற்ற திட்டத்தை வரும் ஜனவரி மாதம் முதல் மத்திய அரசு அமல்படுத்த உள்ளது.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக ஏழைகளுக்கு நவீன வசதிகளை கொண்ட ஸ்மார்ட் போனை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டில் இத்திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதார் அடையாள அட்டை

ஆதார் அடையாள அட்டை

ஆதார் அடையாள அட்டை அடிப்படையில் இந்த செல்போன்கள் ஏழைகளுக்கு வழங்கப்படும். அவர்களுக்கு வங்கியில் கணக்கும் இருக்க வேண்டும். இதற்காக மக்களுக்கு உதவுமாறு மாவட்ட நிர்வாகங்களை பிரதமர் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்த செல் போன்களில், சம்பந்தபட்ட பயனாளிகளின், ‘ஆதார்' அடையாள அட்டை எண்ணும் பதிவு செய்யப்படும்.

ஏழைகளுக்கு இலவச டாக் டைம்

ஏழைகளுக்கு இலவச டாக் டைம்

இலவச செல் போன்களை பெறும் பயனாளிகளுக்கு 100 மணி நேரத்துக்கு இலவச "டாக் டைம்' அளிக்கப்படும். மேலும், 500 எஸ்.எம்.எஸ்.,களையும் இலவசமாக அனுப்பலாம். இதுதவிர குறைந்த கட்டணத்தில் இணைய வசதியையும் பயன்படுத்தலாம்.

பயனாளிகளுக்கான மானிய தொகை அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தப்பட்டதும் அதுபற்றிய தகவல் இந்த செல் போன்களுக்கு உடனடியாக எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும்.

எஸ்.எம்.எஸ்சில் ரேசன் பொருட்கள்

எஸ்.எம்.எஸ்சில் ரேசன் பொருட்கள்

இந்த தகவலை படித்ததும் பயனாளிகள் உடனடியாக வங்கிகளுக்கு சென்று தங்களின் பணத்தை எடுக்கலாம்.மேலும், நியாய விலைக் கடைகளில் பொருட்கள் வினியோகம் செய்யப்படும் தகவலும் எஸ்.எம்.எஸ்., மூலம், பயனாளிகளின் செல் போன்களுக்கு அனுப்பி வைக்கப்படும். இதன்மூலம் முறைகேடுகள் நடப்பது முற்றிலும் தவிர்க்கப்படும்.

7000 கோடி செலவாகுமாம்!

7000 கோடி செலவாகுமாம்!

இந்த செல் போன் வழங்கும் திட்டத்துக்காக அரசுக்கு, 7,000 கோடி ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.ஆனாலும், ஆதார் அடையாள அட்டை எண் வைத்திருப்போர் வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே இந்த இலவச செல் போன்களை பெற முடியும். எனவே ஆதார் அடையாள அட்டை பெறுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

பெண்களுக்குத்தான் செல்போன்

பெண்களுக்குத்தான் செல்போன்

பெரும்பாலான குடும்பங்களில், பெண்களே குடும்ப நிர்வாகத்தை கையாளுகின்றனர் என்பதால் ஒவ்வொரு குடும்பத்திலும் உள்ள மூத்த பெண்களுக்கு இந்த செல் போன்கள் வழங்கப்படும்.இந்த திட்டத்துக்கு ஆகும் செலவில், 50 சதவீதத்தை, தொலை தொடர்பு துறையும், மீதமுள்ள, 50 சதவீதத்தை, சம்பந்தப்பட்ட தொலை தொடர்பு சேவை வழங்கும் நிறுவனமும் ஏற்றுக் கொள்ளும்.என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+