புதுச்சேரியில் பள்ளி அருகே கிடந்த நாட்டு வெடிகுண்டு: மாணவர்கள் பீதி
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு தொடக்கப்பள்ளி ஒன்றின் அருகே நாட்டு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் உள்ள பெருமாள் கோவில் தெரு அருகில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இதன் எதிரே உருண்டையான ஒரு பொருள் அனாதையாக போடப்பட்டுள்ளது. இதை கவனித்த ஒரு ஆட்டோ டிரைவர் அது வெடிகுண்டாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில் அருகே சென்று பார்த்துள்ளார்.
அந்த பொருளின் அருகே வெடி பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து பெரியகடை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வெடிகுண்டு நிபுணர்களுடன் விரைந்து வந்து அந்த பொருளை ஆய்வு செய்தனர். ஆய்வில் அது நாட்டு வெடிகுண்டு ரகத்தைச் சேர்ந்தது என்பது தெரிய வந்தது.
இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் அந்த நாட்டு வெடிகுண்டை செயலிழக்கச் செய்தனர். இதற்கிடையே பள்ளி மாணவ, மாணவிகள் உடனே பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர்.












Click it and Unblock the Notifications