மேட்டூர் அணை தண்ணீர் நிறுத்தம்? கவலையில் காவிரி டெல்டா விவசாயிகள்

கர்நாடக அணைகளில் காவிரியில் திறந்துவிடப்படும் நீர் நிறுத்தப்பட்டதை அடுத்து அணைக்கு ஆயிரத்து 18 கன அடி நீர் மட்டுமே வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரத்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர் இருப்பு 11 புள்ளி 85 டிஎம்சியாக உள்ளது.
இதே அளவு தண்ணீர் திறக்கப்பட்டால், அணையின் நீர் இருப்பு இன்று மாலையுடன் 11 டிஎம்சியாக குறைந்துவிடும். அந்த நீர் குடிநீர் மற்றும் மீன் வளர்ப்புக்குத் தேவை என்பதால், பாசனத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் நிறுத்தப்படும் எனத் தெரிகிறது.
தற்போதைய நிலவரப்படி காவிரி டெல்டா மாவட்ட சம்பா சாகுபடிக்கு 20 முதல் 25 டிஎம்சி தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் முற்றிலும் கருகி பயனற்றுப் போய்விடும் என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
தொடரும் தற்கொலை
இதனிடையே விருதுநகர் மாவட்டத்தில் பயிர்கள் கருகுவதைக் கண்ட விவசாயி ஒருவர் நிலத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எரிச்சநத்தம் அருகே புதுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த பாண்டியன் நான்கு ஏக்கர் பரப்பளவில் பயிர் சாகுபடி செய்திருந்தார். மழை பொய்த்துப்போனதால் தண்ணீர் இன்றி, பயிர்கள் வாடின. இதனால் மனமுடைந்த விவசாயி பாண்டியன் அவரது நிலத்திலேயே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து அருகில் இருந்தவர்கள் மதுரை அரசு மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications