928 கொலைகள்! 768 கொள்ளைகள்!476 செயின் பறிப்புகள்!காரணம் மின்வெட்டு: கருணாநிதி

சென்னையில் மின்வெட்டைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய கருணாநிதி, தமிழ்நாட்டிலே எப்படிப்பட்ட அளவிலே ஜெயலலிதா சொன்னதைப் போல கடந்த காலத்திலே ஒரு 18 மாதங்களுக்கு முன்பு தொடங்கிய இந்த ஆட்சியினால் சட்டம், ஒழுங்கு சீர்கேடு ஏற்பட்டு இருக்கிறது என்பதை நான் பட்டியலிட்டு உங்களிடத்திலே படித்து காட்ட விரும்புகிறேன். இவர்கள் பதவியேற்றது 2011 மே திங்கள். அந்த மே மாதம் முதல் இதுவரையிலே தமிழ்நாட்டில் நடைபெற்றிருக்கின்ற கொலைகள் மாத்திரம் 928. கொள்ளைகள் - 768 செயின் பறிப்புகள் - 476. வழிப்பறி மோசடிகள் - 480 இப்படிப்பட்ட ஆட்சிதான், அருமையான, அற்புதமான அனைவரும் பாராட்டத்தக்க, அகில இந்தியாவில் எங்குமில்லாத அமைதியான ஆட்சி என்று ஜெயலலிதா முழங்கியிருக்கிறார்.
கள்வர்கள் கைவரிசைக்கு வழி
இந்த புள்ளிவிவரத்தை அவர்களுக்கு யாராவது காட்டினால் அல்லது அவரே படித்துப்பார்த்தால், எவ்வளவு பெரிய பொய்யை இந்த நாட்டிற்கு அறிவித்திருக்கிறார் என்பதை அவரே உணர்ந்து வருந்தக் கூடுமென்று நான் கருதுகிறேன். அதாவது சங்கிலி அறுப்பது மாத்திரம் 476. அதாவது 476 பெண்களுடைய கழுத்திலே உள்ள சங்கிலிகளை கயவர்கள் அறுத்திருக்கிறார்கள் என்றால், அதற்கு ஒரு பெண் முதல் அமைச்சரும் தமிழ்நாட்டிலே உள்ள மின் விளக்குகளையெல்லாம் அணைத்து, இருளில் கள்வர்கள் கைவரிசையைக் காட்டுவதற்கு வழி வகுத்திருக்கிறார் என்றால் இந்த அவமானத்தை, இந்த அக்கிரமத்தை எங்கே போய்ச் சொல்வது என்பதை தயவுசெய்து நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.
நேர்மையற்ற அரசு
வள்ளுவர் மிக அழகாகச் சொன்னார், தானாகவே ஒரு அரசு அழிந்து விட வேண்டுமேயானால், அது பிறர் சொல்வதைக் கேட்காத அரசாக, எதிரிகளுடைய வாக்குகளை ஏற்க முடியாது என்கின்ற அகம்பாவம் கொண்ட அரசாக இருக்குமேயானால், அந்த அரசு, கெடுப்பதற்கு யாரும் இல்லாமலேயே தானாகவே அழிந்து விடும் என்று வள்ளுவப் பெருந்தகை சொல்லியிருக்கிறார். அதை மனதிலே கொண்டு இந்த ஆட்சி தன்னைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்பதற்காகத் தான், சொல்வதற்காகத் தான் இன்றையதினம் இந்த ஆர்ப்பாட்டம். மேலும், மின் பிரச்சினைக்காக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் பதில் மனுவிலே கூறப்பட்டுள்ளவைகளையெல்லாம் நீதி மன்றம் கண்காணிக்கும் என்றும், அதற்காக 8 வார காலம் ஒதுக்கியிருக்கிறார்கள். அந்த 8 வாரத்திற்குப் பிறகு மீண்டும் விசாரித்து தீர்ப்பு சொல்லப்படும் என்று நீதிபதிகள் இக்பால் அவர்களும், சிவஞானம் அவர்களும் நேற்று சொல்லியிருக்கிறார்கள் என்றால் நீதிமன்றம் வரையிலே போய், அரசின் நேர்மை எந்த அளவிற்கு இருக்கிறது, எந்த அளவிற்கு இன்றைக்கு தமிழ்நாட்டிலே நேர்மையற்ற, நெறியற்ற, ஒரு அரசு நடைபெறுகிறதோ என்பதைப் பற்றி சந்தேகப்படுகின்ற அளவிலே தான் நிலைை இருக்கிறது என்பதற்காகத் தான் இந்தச் செய்தியை நான் உங்களுக்குத் தெரிவித்தேன்.
பொய் வழக்கு
எதிர்க்கட்சிகள் மீது வரவேற்புத் தட்டிகளுக்கும், வால்போஸ்டர்களுக்கும் செக்ஷன்களைக் குறிப்பிட்டு வழக்குகளைப் போடுகின்ற அளவிற்கு இந்த அரசு மாறியிருக்கின்றது. எதிர்க்கட்சிகள் மீது பல பொய்யான வழக்குகளைத் தொடருவதை இந்த அளவோடு நிறுத்துங்கள். பொறுத்தது போதும், பொங்கி எழுவோம் என்ற நிலைமைக்கு எங்களையெல்லாம் ஆளாக்காதீர்கள் என்று கேட்டுக் கொண்டு, அறப்போர் ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவளித்த தொண்டர்களுக்கு நன்றி என்றார் அவர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications