தென் கொரியாவின் முதல் பெண் அதிபராக சர்வாதிகாரியின் மகள் தேர்வு: ஒபாமா வாழ்த்து

தென் கொரிய அதிபர் தேர்தலில் முன்னாள் சர்வாதிகாரி பார்க் சுங் ஹீயின் மகள் பார்க் ஜியூன் ஹை(60), மூன் ஜே உள்ளிட்டோர் போட்டியிட்டனர். 85 சதவீத வாக்குகள் பதிவானதில் பார்க் ஜியூன் ஹை 51.6 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதன் மூலம் தென் கொரியாவின் முதல் பெண் அதிபர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
தென்கொரியாவின் பொருளாதாரத்தை மீண்டும் நிலைநிறுத்துவேன் என்று பார்க் தேர்தல் நேரத்தில் வாக்குறுதி அளித்திருந்தார். இந்நிலையில் வெற்றிக்கு பிறகு மத்திய சியோலில் பேசிய அவர் தனது தேர்தல் வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.
பார்க் ஜியூன் ஹையின் தந்தை 18 ஆண்டுகள் தென் கொரியாவில் சர்வாதிகாரியாக இருந்தார். அவரை கடந்த 1979ம் ஆண்டு அவரின் உளவுப் பிரிவு தலைவரே சுட்டுக் கொன்றார். பார்க்கின் தாய் அவரது தந்தை இறப்பதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பு வட கொரியாவைச் சேர்ந்த ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். பார்க்கின் தந்தைக்கு வைத்த குறி அவரது தாயின் உயிரை எடுத்துவிட்டது.
தென் கொரியாவின் முதல் பெண் அதிபராகத் தேர்வாகியுள்ள பார்க்கிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications