For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ.க்கு எதிராக சாட்சி சொல்ல கருணாநிதி வற்புறுத்தினார்: கோர்ட்டில் சசிகலா திடுக் தகவல்

By Mathi
Google Oneindia Tamil News

Sasikala
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சாட்சி சொல்ல திமுக தலைவர் கருணாநிதி தம்மை வற்புறுத்தியதாக பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் சசிகலா தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நீதிபதி பாலகிருஷ்ணா விசாரித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டு வந்தன. கடந்த மே 2-ஆம் தேதி வரை 632 கேள்விகள் கேட்கப்பட்டன. சசிகலாவிடம் கேள்விகள் கேட்டு பதில்களைப் பதிவு செய்வது நேற்றுடன் முடிவடைந்தது. மொத்தம் 1,032 கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டு பதில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்றைய விசாரணையின் போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், தமிழகத்தில் தலை தூக்கிவிடக் கூடாது என்ற காரணத்தால் அவருக்கு எதிராக சாட்சி கூறுமாறு முன்னாள் முதல்வர் கருணாநிதி வற்புறுத்தினார். இதற்கு நான் சம்மதிக்கவில்லை. இதனால் அவரது தூண்டுதலின் பேரில், அரசியல் உள்நோக்கத்துக்காக சொத்துக் குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு நான், சுதாகரன், இளவரசி ஆகியோர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டோம். முதல்வர் ஜெயலலிதா மற்றும் எங்கள் 3 பேர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தகுந்த சாட்சியங்களுடன் இதை நீதிமன்றத்தில் நிரூபிப்பேன் என்று சசிகலா கூறினார்.

இந்த வழக்கின் அடுத்த விசாரணை வரும் 26-ந் தேதி நடைபெற இருக்கிறது.

English summary
Tamil Nadu Chief Minister Jayalalithaa's close aide Sasikala Natarajan on Saturday claimed in a special court here that DMK chief M Karunanidhi had in 1996 offered to exclude her from the wealth case against the AIADMK supremo if she turned against her.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X