For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ150 கோடியில் நரேந்திர மோடிக்கு குண்டுதுளைக்காத அலுவலகம்

By Mathi
Google Oneindia Tamil News

Narendra Modi
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 4-வது முறையாக முதல்வர் பதவி ஏற்கும் நரேந்திர மோடி, தமக்கும் தமது அமைச்சரவை சகாக்களுக்குமாக ரூ150 கோடியில் குண்டுதுளைக்காத அலுவலகத்தை அமைத்துள்ளார்.

குஜராத் மாநில அரசியல் அசைக்க முடியாத சக்தி தாம் என்பதை சட்டசபை தேர்தல் வெற்றி மூலம் நிரூபித்தவர் நரேந்திர மோடி. மோடி தமது புதிய அலுவலகத்தை 4 மாடி கட்டிடங்களாக உருவாக்கியிருக்கிறார். இந்தக் கட்டிடத்துக்கு பஞ்சாம் ருத் என்று பெயரிட்டிருக்கிறார் மோடி. அதாவது 6 கோடி குஜராத்திகளுக்கான தேவாமிர்தம் இங்கிருந்துதான் ஊற்றாக செல்லப் போகிறது என்பதுதான் இதற்கு அர்த்தம். இக்கட்டிடத்துக்காக ரூ150 கோடி செலவிடப்பட்டிருக்கிறது.

கட்டிடம் முழுவதுமே குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ளது. குண்டுதுளைக்காத வகையில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டதாக இது அமைக்கப்பட்டிருக்கிறது. குஜராத்தின் புகழ்பெற்ற உயர்நீதிமன்ற கட்டிடம், அமுல் நிறுவன கட்டிடம் ஆகியவற்றை வடிவமைத்த பொறியாளரே இப்புதிய கட்டிடடத்தையும் வடிவமைத்திருக்கிறார். டெல்லி தலைமைச் செயலகத்தைப் போன்றே இப்புதிய கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது,

மொத்தம் 35 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கியிருக்கும் இக்கட்டிடத்தின் முதல் தளத்தில் இருந்து நேரடியாக தலைமைச் செயலகத்துக்குள் நுழையவும் முடியும்.

வரும் ஜனவரி மாதம் நல்ல நாள் பார்த்து இப்புதிய அலுவலகத்தில் ‘குடியேற'ப்போகிறாராம் மோடி!

English summary
Gujarat chief minister Narendra Modi would shift to his newly-built office in Gandhinagar unofficially dubbed as the 'North Block' after 'kamurtas' or the inauspicious period ends in mid-January. Incidentally, the Prime Minister's office is located inside New Delhi's South Block.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X